“என் மனைவியிடம் என்னால் தினமும் அடி வாங்க முடியல, என்னை காப்பாத்துங்க சார்.. இதோ வீடியோ ஆதாரம்” என்று, அப்பாவி கணவன் ஒருவன் சிசிடிவி ஆதாரத்துடன் கதறி அழது புகார் அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் தான், இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டத்தில் அஜித் சிங் என்பவர், அங்குள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சுமன் என்பவருடன், கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து உள்ளது. தற்போது, இந்த தம்பதிக்கு 8 வயதில் ஒரு மகன் இருக்கிறார். அந்த மகன், அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வருகிறார்.

இந்த சூழலில் தான், வீட்டில் கணவன் - மனைவி இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு, இதில் அவர்கள் இருவருக்குள்ளும் சண்டை வந்துகொண்டே இருந்து உள்ளது. 

இதனால், அவரது மனைவி சுமன், தனது கணவனை மகன் விளையாடும் கிரிக்கெட் பேட்டால் எடுத்து, சாத்து சாத்துனு சாத்துவதை வழக்கமாக கொண்டு உள்ளார். 

இப்படியாக, தினமும் தனது மனைவியிடம் அடி வாங்கும் அந்த கணவன், அடிக்கடி வீட்டை விட்டு வெளியே ஓடுவதை வாடிக்கையாக கொண்டிருந்து உள்ளார்.

என்றாலும், அன்றாடம் மனைவியிடம் அடி வாங்குவதை சற்று பொறுத்து பொறுத்து குடும்பம் நடத்தி வந்த அந்த கணவன், நாள்கள் செல்ல செல்ல அந்த மனைவி எல்லை மீறிச் சென்று, அந்த அப்பாவி கணவனை எதற்கு எடுத்தாலும் கடுமையாக தாக்குவதை வாடிக்கையாக தொடர்ந்து உள்ளார். 

இதனால், பொறுமையை இழந்த அந்த அப்பாவி, கணவன், மனைவி தன்னை அடிப்பதை வீட்டில் உள்ள சிசிடிவி காட்சிகளை பதிவ செய்துகொண்டு, “என் மனைவியிடம் இருந்து எனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், என்னை காப்பாற்றுங்கள் என்றும், அந்த அப்பாவி கணவன் அங்குள்ள அல்வார் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.

அத்துடன், “தன் மனைவி சுமன், கிரிக்கெட் பேட்டால் துரத்தி துரத்தி தன்னை அடிக்கும் சிசிடிவி காட்சிகளை” அவர் வீடியோவை பதிவு செய்து நீதிமன்றத்தில் சமர்ப்பித்து உள்ளார். 

இதனையடுத்து, அப்பாவி கணவன் அஜித் சிங் மனுவை விசாரித்த நீதிபதி, சற்று அதிர்ச்சி அடைந்து “போலீசார் இது பற்றி விசாரணை மேற்கொள்ள வேண்டும்” என்று, அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். 

மேலும், “சம்பந்தப்பட்ட அப்பாவி கணவன் அஜித் சிங்கிற்கு, போலீசார் தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும்” என்றும், நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டு உள்ளார்.

அத்துடன், “வரும் ஜூன் மாதம் 7 ஆம் தேதிக்குள் இந்த வழக்கு விசாரணை முடிந்து அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும்” என்றும், போலீசாருக்கு நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டு உள்ளது. 

இதனையடுத்து, அப்பாவி கணவன் அஜித் சிங்கின் மனைவியின் வாக்குமூலம் பெறுவதற்காக, அவருக்கு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

இதனிடையே, அப்பாவி கணவன் அஜித் சிங்கை, அவரது மனைவி சுமன் துரத்தி துரத்தி அடிக்கும் சிசிடிவி காட்சிகளின் வீடியோவானது, தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வேகமாக வைரலாகி வருகிறது.