தமிழ் சினிமாவின் நட்சத்திர நாயகனாக திகழும் நடிகர் அஜித்குமார் தற்போது மீண்டும் பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பில் இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் #AK61 திரைப்படத்தில் நடித்து வருகிறார். #AK61 திரைப்படத்தின் படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

முன்னதாக பின்க் படத்தின் ரீமேக்காக தமிழில் அஜித் குமார் நடித்த நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் மூலம் முதல்முறை இணைந்த அஜித்குமார் வினோத் போனிகபூர் கூட்டணி இரண்டாவது முறையாக வலிமை திரைப்படத்தில் இணைந்தது.  காவல்துறை அதிகாரியாக அஜித் குமார் நடித்த அதிரடி ஆக்ஷன் படமாக வெளிவந்த வலிமை திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது

வலிமை திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது 3-வது முறையாக H.வினோத்-அஜித்குமார் கூட்டணியில் #AK61 திரைப்படம் தயாராகி வருகிறது. அடுத்ததாக முதல்முறையாக இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் இணையும் அஜித் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் #AK62 படத்தில் நடிக்கவிருக்கிறார். #AK62 படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்.

இந்நிலையில் முன்னதாக அஜித் நடிப்பில் வெளிவந்து மெகா ஹிட்டான மங்காத்தா படத்தின் தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி உடன் அஜித் குமார் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படம் தற்போது வெளியானது. இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி அவர்கள், “சும்மாவா சொன்னாங்க அல்டிமேட் ஸ்டார்-னு” எனக் குறிப்பிட்டு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். சோஷியல் மீடியாவில் வைரலாகி வரும் அந்த புகைப்படம் இதோ…