நீண்ட இடைவெளிக்கு பிறகு உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவருகிறது விக்ரம் திரைப்படம். உலகநாயகனின் தீவிர ரசிகரான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் விக்ரம் திரைப்படம் வருகிற ஜூன் 3ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.

கமல்ஹாசனுடன் இணைந்து மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் ஃபகத் பாசில் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, நரேன், அர்ஜுன் தாஸ், சேம்பன் வினோத், காளிதாஸ் ஜெயராம், காயத்ரி, சம்பத்ராம், ஹரிஷ் பெறடி, ஆண்டனி வர்கீஸ், சிவானி, மகேஸ்வரி, மைனா, நந்தினி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

அன்பறிவு மாஸ்டர்ஸ் ஸ்டண்ட் இயக்கத்தில் அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக உருவாகியிருக்கும் விக்ரம் படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவில், ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்ய, அனிருத் இசையமைத்திருக்கிறார்.  முன்னதாக வெளிவந்த விக்ரம் திரைப்படத்தின் ட்ரைலர் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே விஜய் தொலைக்காட்சியில் விக்ரம் திரைப்படத்தின் ஸ்பெஷல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. DD தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இருவரும் கலந்து கொள்கின்றனர். இந்த  நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ தற்போது வெளியானது. 

முன்னதாக விக்ரம் ட்ரைலரில் கமல் ஹாசன் பேசிய மாஸான வசனம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வரும் நிலையில், அந்த விக்ரம் பட வசனத்தை தசாவதாரம் படத்தின் பல்ராம் நாயுடு கதாபாத்திரத்தை போல கமல்ஹாசன் பேசும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அசத்தலான அந்த ப்ரோமோ வீடியோ இதோ…