வீரன் முதல் மாமன்னன் வரை.. ஜூன் மாதம் திரையரங்குகளில் படையெடுக்கும் முக்கியமான திரைப்படங்கள்.. – சிறப்பு பட்டியல் இதோ..

ஜூன் மாதம் வெளியாகும் தமிழ் திரைப்படங்களின் பட்டியல் உள்ளே - Kollywood June month release film list | Galatta

கடந்த மே மாதம் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி கோடை காலத்தை சிறப்பாக நிறைவு பெறச்செய்தது. அதன்படி வெளியான கஸ்டடி, ஃபர்ஹானா, இராவண கோட்டம், பிச்சைக்காரன் 2, குட் நைட், கழுவேத்தி மூர்க்கன், தீரா காதல் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களின் ஆதரவை பெற்று வெற்றி பெற்றது. கோடை காலம் முடிந்து ஜூன் மாதத்தில் பெரும்பாலான முக்கிய படங்கள் வெளியாவது சற்று அறிது. அதன்படி இந்த ஜூன் மாதம் வெளியாகும் முக்கிய திரைப்படங்களின் பட்டியல் குறித்த தொகுப்பு இந்த சிறப்பு கட்டுரை..

ஜூன் 2 

வீரன்

முதல் முறையாக தமிழ் சினிமாவில் நவீன சூப்பர் ஹீரோ கதைகளத்தில் வெளியாகும் திரைப்படம் ‘வீரன்’ ஹிப் ஹாப் ஆதி – மரகத நாணயம் திரைப்படம் இயக்குனர் ARK சரவணன் இணையும் திரைப்படம். இப்படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். சூப்பர் ஹீரோ கதைகளத்தில் உருவாகும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

udhayanidhi stalin mari selvaraj ar rahman in maamannan audio launch in nehru stadium

காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்

ஆர்யா முதல் முறையாக கிராமத்து பின்னணியில் நடிக்கும் திரைப்படம். விருமன் படத்தின் வெற்றிக்கு பின் இயக்குனர் முத்தையா இயக்கம் காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் என்ற படத்திற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்து வருகிறது. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

udhayanidhi stalin mari selvaraj ar rahman in maamannan audio launch in nehru stadium

துரிதம்

இயக்குனர் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் சண்டியர் பட புகழ் ஜெகன் நடித்து வெளியாகும் திரைப்படம் ‘துரிதம்’. திரில்லர் கதைகளத்தில் உருவான இப்படத்தினை ட்ரீம் போக்கஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

udhayanidhi stalin mari selvaraj ar rahman in maamannan audio launch in nehru stadium

ஜூன் 9

டக்கர்

நீண்ட நாளுக்கு பின் சித்தார்த் நடித்து வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘டக்கர்’ பக்கா மாஸ் கமர்ஷியல் திரைப்படமாக உருவான இப்படத்தினை கப்பல் பட இயக்குனர் கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கியுள்ளார். படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார்.

udhayanidhi stalin mari selvaraj ar rahman in maamannan audio launch in nehru stadium

போர் தொழில்

கிரைம் திரில்லர் கதைகளத்தில் அசோக் செல்வன், சரத் குமார் நடித்து வெளியாகவிருக்கும் திரைப்படம் போர் தொழில், இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கிய இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

udhayanidhi stalin mari selvaraj ar rahman in maamannan audio launch in nehru stadium

ஜூன் 16

ஆதி புருஷ்

பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி பான் இந்திய திரைப்படமாக வெளியாகவிருக்கும் திரைப்படம் ஆதி புருஷ். இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் உருவான இப்படம் ரசிகர்கள் மத்தியில் தனி எதிர்பார்ப்பை இப்படம் கொண்டுள்ளது.

udhayanidhi stalin mari selvaraj ar rahman in maamannan audio launch in nehru stadium

ஜூன் 23

தண்டட்டி

பாசுபதி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து கிராம பின்னணியில் உருவாகி வெளியாகவிருக்கும் திரைப்படம் தண்டட்டி. முதல் பார்வையிலிருந்தே இப்படத்திற்கு தனி வரவேற்பு இருந்து வருகிறது.

udhayanidhi stalin mari selvaraj ar rahman in maamannan audio launch in nehru stadium

தேதி வெளியிடப்படாத திரைப்படங்கள்

மாமன்னன்

உதயநிதி ஸ்டாலின், வடிவேலு ஃபஹத் பாஸில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கிய திரைப்படம் ‘மாமன்னன்’ நீண்ட நாட்களாக ரசிகர்களின் எதிர்பார்ப்பை உயர்த்தி இதுவரை தேதி அறிவிக்கப்படாத மாமன்னன் திரைப்படம் இந்த ஜூன் மாதம் வெளியீடாக வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

udhayanidhi stalin mari selvaraj ar rahman in maamannan audio launch in nehru stadium

தலைநகரம் 2

சுந்தர் சி நடித்து இயக்குனர் விசி துரை இயக்கி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தலைநகரம் படத்தின் இரண்டாவது பாகமாக உருவாகும் இப்படத்தின் ரிலீஸ் தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை

  udhayanidhi stalin mari selvaraj ar rahman in maamannan audio launch in nehru stadium

சூப்பர் ஹீரோவாக கலக்க வரும் ஹிப் ஹாப் தமிழா ஆதியின் வீரன்... சர்ப்ரைஸாக வந்த புது ப்ரோமோ வீடியோ இதோ!
சினிமா

சூப்பர் ஹீரோவாக கலக்க வரும் ஹிப் ஹாப் தமிழா ஆதியின் வீரன்... சர்ப்ரைஸாக வந்த புது ப்ரோமோ வீடியோ இதோ!

'சொற்களுக்கு உயிர் இருக்கிறது!'- விஜய் டிவியின் தமிழ்ப்பேச்சு எங்கள் மூச்சு போட்டியாளரை பாராட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!
சினிமா

'சொற்களுக்கு உயிர் இருக்கிறது!'- விஜய் டிவியின் தமிழ்ப்பேச்சு எங்கள் மூச்சு போட்டியாளரை பாராட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!

பிரபாஸின் பிரம்மாண்ட ‘ஆதிபுருஷ்’ படத்தின் 2nd Single .. – காதல் காட்சிகளுடன் வெளியான ‘ராம் சீதா ராம்’ பாடல் வீடியோ இதோ..
சினிமா

பிரபாஸின் பிரம்மாண்ட ‘ஆதிபுருஷ்’ படத்தின் 2nd Single .. – காதல் காட்சிகளுடன் வெளியான ‘ராம் சீதா ராம்’ பாடல் வீடியோ இதோ..