இசையமைப்பாளராக புது அவதாரம் எடுத்த மிஷ்கின்... என்ன படம் தெரியுமா? முதல் அதிகாரப்பூர் அறிவிப்பு இதோ!

மிஷ்கின் இசையமைப்பாளராக அறிமுகமாகும் டெவில் பட அறிவிப்பு,mysskin debut movie as music composer devil official announcement | Galatta

தமிழ் சினிமாவில் தனக்கென தனி பாணியில் தொடர்ந்து தரமான படைப்புகளை வழங்கி வரும் இயக்குனர் மிஷ்கின் தற்போது இசையமைப்பாளராக புதிய அவதாரம் எடுத்திருக்கிறார். முன்னதாக சித்திரம் பேசுதடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான மிஷ்கின் அவர்கள் அடுத்து இயக்கிய அஞ்சாதே திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. தொடர்ந்து நந்தலாலா, யுத்தம் செய், முகமூடி, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு, துப்பறிவாளன் என தொடர்ந்து தனது படங்களால் ரசிகர்களை மகிழ்வித்த இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் சைக்கோ. உதயநிதி ஸ்டாலின் பார்வையற்ற மாற்றுத்திறனாளி கதாப்பாத்திரத்தில் கதையின் நாயகனாக நடித்த சைக்கோ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மிஷ்கின் இயக்கும் அடுத்தடுத்த படங்களுக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். 

அந்த வகையில் பிசாசு படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா கதாநாயகியாக நடித்த பிசாசு 2 திரைப்படத்திற்காக ரசிகர்கள் நீண்ட காலமாக காத்திருக்கின்றனர். விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் பிசாசு 2 திரைப்படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெகு விரைவில் வெளியாகும் என சமீபத்தில் மிஷ்கின் தெரிவித்திருந்தார்.  இயக்குனராக மட்டுமல்லாமல் தற்போது நடிகராகவும் நந்தலாலா, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், சவரக்கத்தி, சூப்பர் டீலக்ஸ், சுட்டுப் பிடிக்க உத்தரவு & பேச்சுலர் என முக்கியமான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் இயக்குனர் மிஷ்கின், அடுத்ததாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பக்கா அதிரடி ஆக்சன் திரைப்படமாக தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் மிக முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். தொடர்ந்து மண்டேலா படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்துவரும் மாவீரன் திரைப்படத்தில் இயக்குனர் மிஷ்கின் வில்லனாக நடித்திருக்கிறார்.

இந்த நிலையில் தற்போது இயக்குனர், நடிகர் என்பதைத் தாண்டி இசை அமைப்பாளராகவும் இயக்குனர் மிஷ்கின் புதிய அவதாரம் எடுத்திருக்கிறார்.  இசையின் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட இயக்குனர் மிஷ்கின், இசைஞானி இளையராஜா அவர்களின் தீவிர ரசிகர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. சமீப காலமாக இசையின் மீது மிகுந்த ஆர்வம் செலுத்தி வரும் இயக்குனர் மிஷ்கின் விரைவில் ஒரு திரைப்படத்திற்கு இசையமைக்க இருக்கிறார் என தகவல்கள் வெளிவந்த நிலையில், இயக்குனர் ஆதித்யா இயக்கத்தில் உருவாகும் டெவில் திரைப்படத்திற்கு இசையமைப்பதன் மூலம் இயக்குனர் மிஷ்கின் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார் என தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தயாரிப்பாளர்கள் ஆர்.ராதா கிருஷ்ணன் மற்றும் எஸ்.ஹரி ஆகியோரோடு பி.ஞானசேகர் இணைந்து தயாரிக்கும் டெவில் படத்திற்கு கார்த்திக் முத்துக்குமார் ஒளிப்பதிவு செய்ய, இளையராஜா படத்தொகுப்பு செய்கிறார். இயக்குனர் மிஷ்கின் இசையமைப்பாளராக களமிறங்கும் டெவில் திரைப்படத்தின் இசை உரிமத்தை சோனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இயக்குனராகவும் நடிகராகவும் மக்களை மகிழ்வித்த இயக்குனர் மிஷ்கின் இசையமைப்பாளராகவும் அனைவரது மனதையும் கவர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குனர் மிஷ்கின் இயக்கும் திரைப்படங்கள் அவருக்கே உரித்தான ஸ்டைலில் இருப்பதால் அவர் இசையமைக்கும் படத்தின் இசையும் பாடல்களும் அதே போல் தனித்துவமாக இருக்கும் என ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கின்றனர். இயக்குனர் மிஷ்கின் இசையமைப்பாளராக அறிமுகமாகும் டெவில் படத்தின் அந்த அறிவிப்பு இதோ…
 

Happy to be associated with the phenomenal @DirectorMysskin's debut musical! 🎶#DevilsAudio 🔜@MaruthiLtd @gnanase9137312 @Aathityaa3 @shamna_kkasim@vidaarth_actor @Thrigun_Aactor #Devil pic.twitter.com/7etKhGdPQv

— Sony Music South (@SonyMusicSouth) May 31, 2023

'வீரன் படம் COPY தான்..!'- கோபமடைந்த ஹிப்ஹாப் தமிழா ஆதி... மின்னல் முரளி இயக்குனரின் பதில் என்ன?- ட்ரெண்டாகும் கலகலப்பான வீடியோ இதோ
சினிமா

'வீரன் படம் COPY தான்..!'- கோபமடைந்த ஹிப்ஹாப் தமிழா ஆதி... மின்னல் முரளி இயக்குனரின் பதில் என்ன?- ட்ரெண்டாகும் கலகலப்பான வீடியோ இதோ

ஹிப்ஹாப் தமிழா ஆதியின் சூப்பர் ஹீரோ அவதாரமான வீரன் படத்தின் கதை இது தானா? சோசியல் மீடியாவில் வைரலாகும் ருசிகர தகவல் இதோ!
சினிமா

ஹிப்ஹாப் தமிழா ஆதியின் சூப்பர் ஹீரோ அவதாரமான வீரன் படத்தின் கதை இது தானா? சோசியல் மீடியாவில் வைரலாகும் ருசிகர தகவல் இதோ!

சச்சின் ANTHEMக்கு பின் மீண்டும் இணைந்த தனுஷ் - அனுஷ்கா காம்போ... ரசிகர்களை  உற்சாகப்படுத்திய புது பாடல் இதோ!
சினிமா

சச்சின் ANTHEMக்கு பின் மீண்டும் இணைந்த தனுஷ் - அனுஷ்கா காம்போ... ரசிகர்களை  உற்சாகப்படுத்திய புது பாடல் இதோ!