“அவர் தங்கமானவர்..” ரஜினிக்கு ஆதரவாக நின்ற சந்திரபாபு நாயுடு.. விமர்சனத்திற்கு பதிலடி – வைரலாகும் பதிவு இதோ..

ரஜினிக்கு ஆதரவாக நின்ற சந்திர பாபு நாயுடு விவரம் உள்ளே - Chandrababu naidu supports rajinikanth | Galatta

இந்தியாவின் உச்ச நடிகர்களில் முக்கியமானவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தன் நடிப்பினாலும் அசாத்தியமான குணத்தினாலும் பல தசாப்தங்களாக உலகெங்கிலும் இருக்கும் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். தமிழ் சினிமாவின் பெருமையாக ரஜினிகாந்த் இன்று இருந்து வருகிறார். தற்போது இவர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இறுதிகட்ட படப்பிடிப்பில் இருக்கும் இப்படம் விரைவில் நிறைவடையும் நிலையில் உள்ளது. அப்படம் முடிந்து ஜெய் பீம் பட இயக்குனர் தசெ ஞானவேல் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார் ரஜினிகாந்த். திரைதுரையில் பிஸியாக இருக்கும் சூப்பர் ஸ்டார் அவ்வப்போது நட்பின் சில நிகழ்சிகளில் கலந்து கொள்வது வழக்கம்.

அதன்படி, சமீபத்தில் மறைந்த பழம்பெரும் நடிகரும் தெலுங்கு தேசம் கட்சியின் நிருவருமான என்.டிராமராவ் அவர்களின் நூற்றாண்டு தொடக்கவிழா விஜயவாடா பகுதியில் நடைபெற்றது. கோலாகலமாக நடைபெற்ற இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உட்பட முக்கிய நடிகர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய சூப்பர் ஸ்டார். தனக்கும் என்டி ராமராவ் அவர்களுக்கும் இருந்த நட்பு, அன்பு குறித்து சிலாகித்து பேசினார். அதே நேரத்தில் அவ்விழாவில் கலந்து கொண்ட ராமராவ் அவரின் மகனும் பிரபல நடிகருமான பால கிருஷ்ணா அவர்களையும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு ஆகியோரையும் ரஜினிகாந்த் புகழ்ந்து பேசினார்.  

அரசியல் கட்சி தலைவரை தேர்தல் வரும் நேரத்தில் புகழ்ந்து பேசுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது என பலர் விமர்சித்து வருகின்றனர்.  இது தொடர்பாக பிரபல நடிகையும் ஒய்.எஸ்.ஆர் கட்சி அமைச்சருமான ரோஜா இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். மேலும் ரஜினிகாந்த் அவர்களை கடுமையாக விமர்சித்தும் உள்ளார்.  

இது ரஜினிகாந்த் ரசிகர்களிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. மேலும் ஒய்.எஸ்.ஆர் கட்சியினரை எதிர்த்தும் ரோஜாவின் கருத்துக்கும் கடும் எதிர்ப்பு தெலுங்கு தேசம் கட்சியினர் சார்பில் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் என் டி ராமாராவ் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினிகாந்த் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

அதில், “நேர்மை, பணிவு ஆகியவற்றின் உருவமாக இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவருக்கு எதிராக ஒய்.எஸ்.ஆர் கட்சியின் தலைவர்கள் தரக்குறைவாக மற்றும் இழிவான கருத்துகளை தெரிவிப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். ரஜினிகாந்த் இதயம் தங்கம் போன்றது, அவர் இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள அனைவராலும் நேசிக்கப்படும் மனிதர். ஜகன் மோகன் ரெட்டியின் வக்கிர கும்பலால் அவர் மீது கட்டவிழுத்துவிடப்படும் தாக்குதளுக்கு மக்கள் அவர்களுக்கு தகுந்த பாடம் புகட்டுவார்கள்.” என்று குறிப்பிட்டு அதனுடன் #TeluguPeoplewithrajinikanth என்ற ஹேஷ்டேக்குடன்  பதிவிட்டு தனது ஆதரவினை தெரிவித்துள்ளார். இந்த பதிவு மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது. இதையடுத்து ரஜினிகாந்த் அவருக்கு ஆதரவாக தெலுங்கு மக்கள் மற்றும் ரஜினிகாந்த் ரசிகர்கள் ஒன்று திரண்டு தங்களது ஆதரவுகளை தெரிவித்து வருகின்றனர்.

ஏ ஆர் ரகுமான் பாடும்போது மேடையேறிய போலீஸ்.. பாதியில் நின்ற கான்செர்ட் – அதிர்ச்சியில் ரசிகர்கள்.. வைரலாகும் வீடியோ இதோ..
சினிமா

ஏ ஆர் ரகுமான் பாடும்போது மேடையேறிய போலீஸ்.. பாதியில் நின்ற கான்செர்ட் – அதிர்ச்சியில் ரசிகர்கள்.. வைரலாகும் வீடியோ இதோ..

“இதில் மாற்று கருத்துகள் இருந்தால் கூட..”  பொன்னியின் செல்வன் 2 விமர்சனத்திற்கு கமல் ஹாசன் அதிரடி விளக்கம்..! விவரம் உள்ளே..
சினிமா

“இதில் மாற்று கருத்துகள் இருந்தால் கூட..” பொன்னியின் செல்வன் 2 விமர்சனத்திற்கு கமல் ஹாசன் அதிரடி விளக்கம்..! விவரம் உள்ளே..

ஐஸ்வர்யா ராஜேஷின் ‘ஃபர்ஹானா’ படத்தின் காட்சிகளுடன் வெளியான சிறப்பு பாடல் – ஆண்ட்ரியா குரலில் அட்டகாசமான பாடல் இதோ..
சினிமா

ஐஸ்வர்யா ராஜேஷின் ‘ஃபர்ஹானா’ படத்தின் காட்சிகளுடன் வெளியான சிறப்பு பாடல் – ஆண்ட்ரியா குரலில் அட்டகாசமான பாடல் இதோ..