"மாநகரம் லோகேஷிடம் இந்த LOKI சொல்லும் அட்வைஸ் என்ன?"- அசத்தலான பதிலளித்த லோகேஷ் கனகராஜ்! வைரல் வீடியோ

தளபதி விஜயின் லியோ பட இயக்குனர் லோகேஷ் கனகராஜின் சிறப்பு பேட்டி,lokesh kanagaraj special interview about thalapathy vijay in leo movie | Galatta

மாநகரம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி தனது முதல் படத்திலேயே அனைவரது கவனத்தையும் ஈர்த்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது இரண்டாவது படமான கைதி திரைப்படத்தில் இந்திய அளவில் கவனத்தை ஈர்த்தார். மாநகரம் மற்றும் கைதி ஆகிய இரண்டு திரைப்படங்களும் பாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரிலீசானதும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தனது மூன்றாவது படத்தில் தளபதி விஜய் உடன் இணைந்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உருவாக்கிய மாஸ்டர் திரைப்படம் மெகா ஹிட்டாக நான்காவது படமாக உலக நாயகன் கமல்ஹாசன் உடன் கைகோர்த்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் திரைப்படம் கடந்த 2022 ஆம் ஆண்டின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படமாக வசூல் வேட்டை நடத்தியது.

அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் திரைப்பயணத்தில் 171-வது திரைப்படமாக உருவாக இருக்கும் தலைவர் 171 திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கு இருப்பதாக தெரிகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெகு விரைவில் வெளியாகும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே தற்போது தனது லியோ திரைப்படத்தில் முழு கவனம் செலுத்தி வருகிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு தளபதி விஜயுடன் மீண்டும் இணைந்திருக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பக்கா அதிரடி ஆக்சன் படமாக தயாராகும் இந்த லியோ திரைப்படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் SS.லலித்குமார் மற்றும் ஜெகதீசன் பழனிசாமி இணைந்து தயாரித்து இருக்கின்றனர். 

நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகை திரிஷா, தளபதி விஜயுடன் இணைந்து நடித்திருக்கும் லியோ படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய்தத் ஆக்சன் கிங் அர்ஜுன் மன்சூர் அலிகான் இயக்குனர்கள் மிஷ்கின் கௌதம் வாசுதேவ் மேனன் அனுராக் கஷ்யப் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வருகிற அக்டோபர் 19ஆம் தேதி ஆயுத பூஜை வெளியிடாக லியோ திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. இந்த நிலையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் இன்று ஜூலை 19ஆம் தேதி கோயம்புத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு மாணவர்களோடு உரையாடினார். விழா முடிந்து நமது கலாட்டா தமிழ் சேனலுக்கு பிரத்தியேகமாக பேட்டி கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் நம்மோடு பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில்,

மாநகரம் லோகேஷிடம் இந்த LOKI சொல்லும் அட்வைஸ் என்ன? அல்லது எதை தெரிவிக்க விரும்புகிறீர்கள்? எனக் கேட்டபோது, "இல்லை எந்த குற்றச்சாட்டுகளும் இல்லை.. நான் அப்போது இருந்த மூன்று வருட காத்திருந்த காலத்தில் எழுதிய கதைகளை தான் இப்போது படங்களாக மாறிக் கொண்டிருக்கின்றன. எனவே எதுவும் நம் கையில் இல்லை அல்லவா.. நாமே குற்றம் சொல்லிக் கொண்டிருந்தால் அப்புறம் ஒன்றுமே இல்லை... நீங்கள் சொன்ன மாதிரி இவ்வளவு புகழ் இருக்கிறது.. இவ்வளவு பெயர் இருக்கிறது.. அப்படி இருக்கும் போது என்ன குற்றச்சாட்டுகள் சொல்வது..." என பதில் அளித்திருக்கிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜின் அந்தப் பிரத்யேக பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணலாம்.
 

தளபதி விஜயின் லியோ படத்துடன் கைகோர்த்த தனுஷின் சூப்பர் ஹிட் பட தயாரிப்பு நிறுவனம்... ரிலீஸ் பற்றிய அட்டகாசமான புது அறிவிப்பு!
சினிமா

தளபதி விஜயின் லியோ படத்துடன் கைகோர்த்த தனுஷின் சூப்பர் ஹிட் பட தயாரிப்பு நிறுவனம்... ரிலீஸ் பற்றிய அட்டகாசமான புது அறிவிப்பு!

சினிமா

"மங்காத்தா தீம் மாதிரி இருக்குமா?"- விஜய் - வெங்கட் பிரபு கூட்டணியின் தளபதி 68 பக்கா மாஸ் அப்டேட் கொடுத்த யுவன் சங்கர் ராஜா! ட்ரெண்டிங் வீடியோ

மிரட்டலான புதிய லுக்கில் பிரபாஸ்... ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த ப்ராஜெக்ட் கே பட அதிரடியான GLIMPSE இதோ!
சினிமா

மிரட்டலான புதிய லுக்கில் பிரபாஸ்... ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த ப்ராஜெக்ட் கே பட அதிரடியான GLIMPSE இதோ!