தளபதி விஜயின் லியோ படத்துடன் கைகோர்த்த தனுஷின் சூப்பர் ஹிட் பட தயாரிப்பு நிறுவனம்... ரிலீஸ் பற்றிய அட்டகாசமான புது அறிவிப்பு!

தளபதி விஜயின் லியோ படத்தை தெலுங்கில் வெளியிடும் சித்தாரா என்டர்டைன்மென்ட்,vijay in leo movie telugu rights bagged by sithara entertainmants | Galatta

இந்த 2023 ஆம் ஆண்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படங்களில் ஒன்றாக கவனிக்கப்படும் தளபதி விஜயின் லியோ திரைப்படத்தின் தெலுங்கு ரிலீஸ் உரிமையை முன்னணி தயாரிப்பு நிறுவனம் தற்போது கைப்பற்றியிருக்கிறது. பல கோடி ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோவாகவும் முன்னணி நட்சத்திர நாயகராகவும் ஜொலிக்கும் தளபதி விஜய் அடுத்ததாக முதல்முறை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது திரைப்பயணத்தில் 68வது திரைப்படமாக உருவாகும் தளபதி 68 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் பிகில் படத்திற்கு பின் தளபதி 68 படத்தை தயாரிக்கிறது. நீண்ட காலமாக ரசிகர்கள் காத்திருந்த தளபதி விஜய் -  யுவன் சங்கர் ராஜா கூட்டணி தளபதி 68 படத்தில் இணைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்த தளபதி 68 திரைப்படத்தின் இதர அறிவிப்புகள் அனைத்தும் லியோ திரைப்படத்தின் ரிலீஸுக்கு பிறகு ஒவ்வொன்றாக வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

முன்னதாக மாஸ்டர் படத்திற்கு பிறகு மீண்டும் இணைந்திருக்கும் தளபதி விஜய் - இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் பக்கா அதிரடி ஆக்சன் பிளாக் திரைப்படமாக உருவாகி வருவது தான் லியோ திரைப்படம். தளபதி விஜய் உடன் நீண்ட இடைவெளிக்கு பிறகு லியோ திரைப்படத்தில் இணைந்திருக்கும் திரிஷா கதாநாயகியாக நடிக்க, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், இயக்குனர் அனுராக் கஷ்யப், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், மறைந்த நடிகர் மனோபாலா, ஜார்ஜ் மர்யன், அபிராமி வெங்கடாசலம், சாந்தி மாயாதேவி மற்றும் பிரபல தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளர் பிரதீப் முத்து ஆகியோர் லியோ திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். 

இது போக முக்கிய சிறப்பு தோற்றத்தில் விக்ரம் படத்தில் சூர்யாவின் ரோலக்ஸ் கதாபாத்திரம் வந்தது போல லியோ திரைப்படத்தில் நடிப்பதற்காக நடிகர் தனுஷ் மற்றும் நடிகர் ராம்சரண் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தகவல்கள் வெளி வந்தன.இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு லியோ திரைப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் தயாரிப்பில் மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவில், ஃபிலாமின் ராஜ் படத்தொகுப்பு செய்யும் லியோ திரைப்படத்திற்கு N.சதீஷ்குமார் கலை இயக்குனராக பணியாற்றுகிறார். அதிரடி ஆக்சன் திரைப்படமாக தயாராகும் லியோ திரைப்படத்தின் ஸ்டண்ட் இயக்குனர்களாக அன்பறிவு மாஸ்டர்கள் பணியாற்ற, தினேஷ் மாஸ்டர் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார். 
வருகிற அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி ஆயுத பூஜை வெளியிடாக லியோ திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. PAN INDIA திரைப்படமாக ரிலீஸ் ஆகும் லியோ திரைப்படத்தை வெளிநாடுகளில் இதுவரை எந்த தென்னிந்திய படமும் ரிலீஸ் ஆகாத அளவிற்கு பிரம்மாண்டமாக வெளியிட ஏற்பாடுகள் நடைபெறுவதாக தயாரிப்பாளர் ஏற்கனவே தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தனுஷின் வாததி படத்தின் தயாரிப்பு நிறுவனமான சித்தாரா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் லியோ திரைப்படத்தின் தெலுங்கு ரிலீஸ் உரிமத்தை கைப்பற்றி இருப்பதாக தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பு இதோ…
 

Nenu vasthunna readyy-gaaa 🔥
We are thrilled to announce that @SitharaEnts has officially bagged the Telugu theatrical rights of #LEO#LEOwithSitharaEntertainment #Thalapathy @actorvijay sir @Dir_Lokesh @trishtrashers @anirudhofficial @duttsanjay @akarjunofficialpic.twitter.com/3zsKWqfn1X

— Seven Screen Studio (@7screenstudio) July 19, 2023

விஜயின் 'அரசியல் வருகை' & லியோ பட 'நா ரெடி' பாடல் சர்ச்சை பற்றி தளபதி68 இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் பதில்! வைரல் வீடியோ
சினிமா

விஜயின் 'அரசியல் வருகை' & லியோ பட 'நா ரெடி' பாடல் சர்ச்சை பற்றி தளபதி68 இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் பதில்! வைரல் வீடியோ

சீயான் விக்ரம் - கௌதம் வாசுதேவ் மேனனின் துருவ நட்சத்திரம் பட பக்கா ஆக்ஷன் ட்ரீட்… செம்ம ஸ்டைலான ‘His Name Is John’ பாடல் இதோ!
சினிமா

சீயான் விக்ரம் - கௌதம் வாசுதேவ் மேனனின் துருவ நட்சத்திரம் பட பக்கா ஆக்ஷன் ட்ரீட்… செம்ம ஸ்டைலான ‘His Name Is John’ பாடல் இதோ!

சினிமா

"எல்லாமே இந்த ஒரு மனிதரால் தான்..!"- சிவகார்த்திகேயனின் மாவீரன் பட வெற்றிக்கு தயாரிப்பாளரின் எமோஷனலான அறிக்கை இதோ!