'ஒவ்வொரு தழும்புக்கும் ஒரு கதை உண்டு… மன்னர் வருகிறார்!'- சூர்யாவின் கங்குவா பட மிரட்டலான முதல் GLIMPSE ரிலீஸ் தேதி அறிவிப்பு இதோ!

சூர்யாவின் கங்குவா பட மிரட்டலான முதல் GLIMPSE ரிலீஸ் தேதி அறிவிப்பு,suriya in kanguva movie glimpse release date announcement | Galatta

எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் நடிகர் சூர்யாவின் கங்குவா திரைப்படத்தின் GLIMPSE ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது.  ஆகச்சிறந்த நடிகராக தொடர்ச்சியாக தரமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்துவரும் நடிகர் சூர்யா அடுத்ததாக வாடிவாசல் திரைப்படத்தில் முதல் முறை இயக்குனர் வெற்றிமாறனுடன் கைகோர்க்கிறார். வாடிவாசல் படத்திற்காக பிரத்யேகமாக காளை ஒன்று ரோபோவாக அனிமேட்ரானிக்ஸ் முறையில் தயாராகி வருவதும் குறிப்பிடத்தக்கது. இதனிடையே நடிகர் சூர்யாவின் திரைப் பயணத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு பிரம்மாண்ட படைப்பாக மிகப்பெரிய பொருட்செலவில் தயாராகி வருகிற திரைப்படம் தான் கங்குவா. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் கங்குவா திரைப்படத்தில் சூர்யாவுடன் இணைந்த பிரபல பாலிவுட் நடிகை திஷா பதாணி கதாநாயகியாக நடிக்கிறார். 

ஸ்டுடியோ கிரீன் சார்பில் தயாரிப்பாளர் KE.ஞானவேல் ராஜா அவர்கள் தயாரிப்பில் உருவாகும் கங்குவா திரைப்படத்தை UV கிரியேஷன்ஸ் நிறுவனம் வழங்குகிறது. அட்டகாசமான போர் காட்சிகள் கொண்ட கங்குவா திரைப்படத்தின் VFX பணிகளுக்காக மட்டுமே பல கோடி ரூபாயை செலவிட படக்குழு திட்டமிட்டுள்ளது. படப்பிடிப்பு நிறைவடைந்தாலும் இந்த கிராபிக்ஸ் பணிகள் இருப்பதால் கங்குவா படம் அடுத்த 2024 ஆண்டு தொடக்கத்தில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மிரள வைக்கும் பீரியட் ஆக்சன் திரைப்படமாக உருவாகும் கங்குவா திரைப்படம் ஒரு இன்டர்நேஷனல் கதைக்களம் கொண்ட திரைப்படமாக தயாராவதால் ரசிகர்களுக்கு விருந்தாக 3D தொழில்நுட்பத்தில் பத்து மொழிகளில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். மிலன் கலை இயக்கத்தில், வெற்றி பழனிசாமி ஒளிப்பதிவில், நிஷாத் யூசுப் படத்தொகுப்பு செய்யும் கங்குவா திரைப்படத்திற்கு, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். துணிவு படத்தின் ஸ்டண்ட் இயக்குனர் சுப்ரீம் சுந்தர் கங்குவா திரைப்படத்தின் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றியிருக்கிறார்.

தமிழ் சினிமா வரலாற்றிலேயே அதிகபட்சமாக கங்குவா திரைப்படத்தின் தென்னிந்திய மொழிகளுக்கான உரிமம் மட்டும் 80 கோடி ரூபாய்க்கு அமேசான் பிரைம் வீடியோவில் வியாபாரம் நடந்துள்ளது. தற்சமயம் கங்குவா திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முன்னதாக தனது திரை பயணத்தில் மிக முக்கிய படமாக உருவாகும் கங்குவா திரைப்படத்தின் லுக்கிற்காக மிரட்டலான உடற்கட்டிற்கு சூர்யா தன்னை தயார் செய்து இருக்கிறார். சமீபத்தில் கங்குவா திரைப்படத்தின் டீசருக்கான படப்பிடிப்பு நடைபெற்றது. இதில் சூர்யாவின் லுக் மிகவும் மிரட்டலாக இருப்பதாக தகவல்கள் வெளிவந்தன. இந்த டீசருக்காக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நட்சத்திர நடிகர்கள் குரல் கொடுத்திருக்கின்றனர். இந்த நிலையில் ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த கங்குவா படத்தின் டீசர் வீடியோவாக GLIMPSE OF KANGUVA என்ற வீடியோ வருகிற ஜூலை 23ஆம் தேதி வெளியாகும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அறிவிக்கும் வகையில், “ஒவ்வொரு தழும்புக்கும் ஒரு கதை உண்டு. மன்னர் வருகிறார்…” எனக் குறிப்பிட்டு அறிவிப்பு போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அட்டகாசமான அந்த அறிவிப்பு மற்றும் புதிய போஸ்டரை கீழே உள்ள லிங்கில் காணலாம்.
 

Each scar carries a story!

The King arrives 👑#GlimpseOfKanguva on 23rd of July! @Suriya_offl @DishPatani @directorsiva @ThisIsDSP @StudioGreen2 @kegvraja @UV_Creations @saregamasouth@KanguvaTheMovie #Kanguva 🦅 pic.twitter.com/CV5iktmMHG

— Studio Green (@StudioGreen2) July 20, 2023

விஜய் ஆண்டனியின் சஸ்பென்ஸ் த்ரில்லர் கொலை படம் உருவானது எப்படி?- படக்குழு வெளியிட்ட சுவாரஸ்யமான மேக்கிங் வீடியோ இதோ!
சினிமா

விஜய் ஆண்டனியின் சஸ்பென்ஸ் த்ரில்லர் கொலை படம் உருவானது எப்படி?- படக்குழு வெளியிட்ட சுவாரஸ்யமான மேக்கிங் வீடியோ இதோ!

தளபதி விஜயின் லியோ படத்துடன் கைகோர்த்த தனுஷின் சூப்பர் ஹிட் பட தயாரிப்பு நிறுவனம்... ரிலீஸ் பற்றிய அட்டகாசமான புது அறிவிப்பு!
சினிமா

தளபதி விஜயின் லியோ படத்துடன் கைகோர்த்த தனுஷின் சூப்பர் ஹிட் பட தயாரிப்பு நிறுவனம்... ரிலீஸ் பற்றிய அட்டகாசமான புது அறிவிப்பு!

சினிமா

"மங்காத்தா தீம் மாதிரி இருக்குமா?"- விஜய் - வெங்கட் பிரபு கூட்டணியின் தளபதி 68 பக்கா மாஸ் அப்டேட் கொடுத்த யுவன் சங்கர் ராஜா! ட்ரெண்டிங் வீடியோ