தமிழ் திரையுலகின் சிறந்த இயக்குனரான இயக்குனர் செல்வராகவன் சாணிக் காயிதம் திரைப்படத்தின் மூலம் முதல்முறை நடிகர் அவதாரம் எடுத்துள்ளார். செல்வராகவன் கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்துள்ள சாணிக் காயிதம் படத்தை இயக்கிய இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவான முதல் திரைப்படம் ராக்கி தற்போது ரிலீசுக்கு தயாராகிவுள்ளது.

ராக்கி படத்தில் வசந்த் ரவி மற்றும் இயக்குனர் பாரதிராஜா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க டப்பிங் கலைஞர் ரவீனா ரவி மற்றும் நடிகை ரோகிணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். RA ஸ்டூடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் மனோஜ்குமார் தயாரித்துள்ள ராக்கி திரைப்படத்திற்கு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்ய, தர்புகா சிவா இசையமைத்துள்ளார். 
 
ராக்கி படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் நீண்ட நாட்களாக காத்திருந்த நிலையில் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. வருகிற டிசம்பர் 23-ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ள ராக்கி  திரைப்படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை பிரபல தயாரிப்பு நிறுவனமான சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் கைப்பற்றியுள்ளது

இந்நிலையில் ராக்கி  திரைப்படத்தின் 3வது பாடலாக வன்ம பாதையில் பாடல் லிரிக் வீடியோ தற்போது வெளியானது.சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ராக்கி திரைப்படத்தின் மிரட்டலான வன்ம பாதையில் பாடலின் லிரிக்கல் வீடியோவை கீழே உள்ள லிங்கில் கண்டு மகிழுங்கள்.