தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான விஜய் கடந்த சில ஆண்டுகளாக பல மொழி ரசிகர்களாலும் கவரப்பட்டு வருகிறார். தென்னிந்தியாவில் விஜய் படம் என்றாலே ஒரு தனி சிறப்பு. அவர் படம் வெளியாகும் தினம் என்றால் கேரளா, தமிழ் நாடு சுற்றியுள்ள பிற மாநிலங்களிலும் கோலாகலமாக வெளியாவது உண்டு. பல மொழிகளில் விஜய் படம் டப் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது.

சமீபத்தில் தளபதி விஜய் நடிப்பில் வரும் பொங்கலையொட்டி வெளியாகவிருக்கும் படம் ‘வாரிசு’. இப்படத்தின் வரவேற்பு கோலாகலமாக நடைபெற்று கொண்டிருக்கின்றனர். நாளை வெளியாகவிருக்கும் வாரிசு படத்தின் முன்பதிவு ரசிகர்களால் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பாலிவுட் கிங் கான் ஷாருக்கான் நடிப்பில் உருவாகியிருக்கும் படமான ‘பதான்’ படத்தின் டிரைலரை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார் நடிகர் விஜய். தமிழ் டிரைலரை பகிர்ந்த அவர், “வாழ்த்துகள் ஷாருக் கான் சார் மற்றும் படக்குழு” என்று குறிப்பிட்டிருந்தார்.

 

Wishing @iamsrk sir and the team all the best for #Pathaan

Here is the trailer https://t.co/LLPfa6LR3r#PathaanTrailer

— Vijay (@actorvijay) January 10, 2023

ஷாருக் கான் முன்னதாக விஜய் - அட்லி கூட்டணியில் வெளிவந்த ‘பிகில்’ படத்தின் டிரைலரையும் நெல்சன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த ‘பீஸ்ட்’ படத்தின் டிரைலரையும் வெளியிட்டார். மேலும் தற்போது ஷாருக் கான் விஜயின் விருப்பமான இயக்குனர் அட்லி இயக்கத்தில் ‘ஜவான்' திரைப்படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இதில் விஜய் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார் என்ற தகவலும் வைரலானது. இதனிடையே சமீபத்தில் விஜய் ஷாருக் கான் அட்லி சந்திப்பு நடைபெற்றது. தற்போது பல இடங்களில் ஷாருக் கான் – விஜய் நட்புறவை தொடர்ந்து  ரசிகர்கள் பேசி வருகிறார்கள்.

இந்நிலையில்  தற்போது ஷாருக் கான் பட டிரைலரை விஜய் வெளியிட்டதால் ஷாருக் கான் ரசிகர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்து விஜய் பதிவை அதிகளவு பகிர்ந்து வருகின்றனர்.

மேலும் காவி நீச்சல் உடையில் தீபிகா படுகோன் தோன்றிய பாடல் சமீபத்தில் வெளியானது. இதில் காவி உடை குறித்த பிரச்சனை வைரலானது. இந்த பிரச்சனை சற்று அதிகரித்து படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று பிரச்சனை வலுத்தது. ஏற்கனவே பாலிவுட் திரையுலகில் எந்த படமும் சரியான வரவேற்பு பெறாத நிலையில், இந்த சூழலை மாற்ற  ஷாருக் கான் படத்தை பலர் எதிர்பார்த்து வந்தனர், இந்த பிரச்சனை ஒருபுறம் இருந்தாலும் பதான் படத்தின் டிரைலர் வெளியீடு செய்யப்பட்டது. இந்திய அளவு பேசப்பட்ட காவி உடை பிரச்சனைக்கு இடையே தளபதி விஜய் பதான் படத்தின் தமிழ் மொழி டிரலரை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். இதனையடுத்து  விஜய் பதிவு வைரலாகி வருகின்றனர்.

ஷாருக் கான் நடிப்பில் உருவாகியுள்ள பதான் படத்தில் தீபிகா படுகோன், ஜான் ஆப்ரகாம், டிம்பிள் கபாடியா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ‘வார்’, ‘பாங் பாங்’ போன்ற படங்களில் அதிரடி காட்சிகளால் அதிகம் கவனம் பெற்ற ஆதித்யா சோப்ரா இந்த படத்தை இயக்கியுள்ளார். பிரபல தயாரிப்பு நிறுவனமான யாஷ் ராஜ் தயாரிப்பு நிறுவனத்தின் 50வது படம் இதுவாகும். இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.