தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் தளபதி விஜய்.இவர் நடிப்பில் கடைசியாக மாஸ்டர் படம் 2021 பொங்கலுக்கு வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது.இதனை தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார்.இந்த படம் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது.

இதனை அடுத்து விஜய் நடிக்கும் படம் தளபதி 66.இந்த படத்தினை தோழா,மஹரிஷி போன்ற வெற்றி படங்களை இயக்கிய வம்சி இயக்குகிறார்.தெலுங்கின் முன்னணி தயாரிப்பாளரான தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிக்கின்றனர்.

இந்த படத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது.இந்த படத்தின் ஷூட்டிங் மற்றும் படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த தகவல் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.தமன் இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார் என்ற தகவலும் பரவலாக பரவி வருகிறது.

இயக்குனர் வம்சி அடுத்ததாக பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் தேவர்கொண்டா நடிக்கும் JGM படத்தினை இணைந்து தயாரிக்கிறார்.இந்த படம் நேற்று மும்பையில் அறிவிக்கப்பட்டது.இதன் பத்திரிகையாளர் சந்திப்பின் போது தளபதி 66 குறித்து வம்சி பேசியுள்ளார்,அதில் விஜய் போன்ற ஒரு சூப்பர்ஸ்டாருடன் வேலை பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.