தமிழ் சினிமாவின் குறிப்பிடப்படும் கதாநாயகர்களில் ஒருவராகவும் தென்னிந்தியத் திரையுலகின் மிக முக்கிய நடிகராகவும் விளங்கும் ஆதி நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் கடைசியாக வெளிவந்த கிளாப் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. கிளாப் திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து இயக்குனர் லிங்குசாமியின் இயக்கத்தில் தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளில் தயாராகிவரும் தி வாரியர் படத்திலும் ஆதி நடித்து வருகிறார். பிரபல தெலுங்கு நடிகர் ராம் போதினேனி கதாநாயகனாக நடிக்கும் தி வாரியர் திரைப்படத்தில் ஆதி மிரட்டலான வில்லனாக நடிக்கிறார். முன்னதாக நடிகர் ஆதி மற்றும் நிக்கி கல்ராணியின் நிச்சயதார்த்தம் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது.

இதனிடையே நடிகர் ஆதி மற்றும் நடிகை ஹன்சிகா மோத்வானி இணைந்து நடித்து விரைவில் வெளிவரவுள்ள திரைப்படம் பாட்னர். இயக்குநர் மனோஜ் தாமோதரன் எழுதி இயக்கியுள்ள பாட்னர் படத்தில் யோகி பாபு, பாண்டியராஜன், ரோபோ சங்கர், ஜான்விஜய், ரவி மரியா மற்றும் டைகர் தங்கதுரை ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ROYAL FORTUNA CREATIONS தயாரித்துள்ள பாட்னர் படத்திற்கு சபீர் அஹமத் ஒளிப்பதிவில், பிரதீப்.V.ராகவ் படத்தொகுப்பு செய்ய, சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். இந்நிலையில் இன்று (மார்ச் 30 ஆம் தேதி) பாட்னர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் முதல் பாடலாக மூஞ்சி பாடலும் வெளியானது. பாட்னர் ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் & தேனிசை தென்றல் தேவா பாடியுள்ள கலக்கலான மூஞ்சி பாடல் இதோ…