சின்னத்திரையில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் ப்ரஜின்.விஜய் டிவியில் ஒளிபரப்பான காதலிக்க நேரமில்லை தொடரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவராக மாறினார்.இவருக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவானது.சீரியல்கள் மட்டுமின்றி சில படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து அசத்தி வந்தார் ப்ரஜின்.

சில  வருட இடைவேளைக்கு பிறகு இவர் மீண்டும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர்ஹிட் அடித்த சின்னத்தம்பி தொடரில் ஹீரோவாக நடித்தார்.இந்த தொடர் நிறைவடைந்த பின் அன்புடன் குஷி தொடரில் நடித்து வந்தார்,இந்த தொடர் கடந்த வருடம் நிறைவடைந்தது.விஜய் டிவியில் சமீபத்தில் ஒளிபரப்பை தொடங்கிய வைதேகி காத்திருந்தாள் தொடரில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

சரண்யா இந்த தொடரில் நாயகியாக நடித்துள்ளார்.இதனை தவிர சமீபத்தில் சில படங்களில் ஹீரோவாகவும் கமிட் ஆனார் ப்ரஜின்.படங்கள் மற்றும் சீரியல்களில் தேதி பிரச்சனை காரணமாக இவர் இந்த தொடரில் இருந்து விலகியுள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.இவர் விலகியது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ப்ரஜினுக்கு பதிலாக யார் ஹீரோவாக வரப்போகிறார்கள் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர்.தற்போது சந்திரலேகா,ராஜபார்வை உள்ளிட்ட தொடர்களில் நடித்த முன்னா புது ஹீரோவாக இணைந்துள்ளார் என்பதை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவிட்டு உறுதிப்படுத்தியுள்ளார்,அதிலுள்ள ஹிண்ட் மூலம் இவர் இந்த தொடரில் இணைந்துள்ளார் என்று தெரிந்துள்ளது.