இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திர நடிகர்களில் ஒருவரான தளபதி விஜய் அவர்களின் மேலாளரும், மாஸ்டர் திரைப்படத்தின் இணை தயாரிப்பாளருமான ஜெகதீஷ் அவர்கள் தற்போது தயாரிப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார். அந்தவகையில் தனது தயாரிப்பில் முதல் திரைப்படமாக மலையாளத்தில் ஷேஷம் மைக்கில் ஃபாத்திமா எனும் திரைப்படத்தை தயாரிக்கிறார் ஜெகதீஷ்.

இயக்குனர் மனோ.C.குமார் இயக்கத்தில் தென்னிந்திய சினிமாவின் பிரபல இளம் கதாநாயகியாக வலம் வரும் நடிகை கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடிக்கும் ஷேஷம் மைக்கில் ஃபாத்திமா திரைப்படத்தை தயாரிப்பாளர் ஜெகதீஷின் The Route மற்றும் தயாரிப்பாளர் சுதன் சுந்தரத்தின் PASSION STUDIOS இணைந்து தயாரிக்கின்றன.

கலகலப்பான ஃபேமிலி என்டர்டெய்னர் திரைப்படமாக தயாராக இருக்கும் ஷேஷம் மைக்கில் பாத்திமா திரைப்படத்திற்கு சந்தான கிருஷ்ணன் ஒளிப்பதிவில், கிரண் தாஸ் படத்தொகுப்பு செய்ய, ஹேஷம் அப்துல் வாஹாப் இசையமைக்கிறார். ஷேஷம் மைக்கில் ஃபாத்திமா திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. 

ஷேஷம் மைக்கில் ஃபாத்திமா திரைப்படத்தின் படப்பூஜை, படக்குழுவினர் அனைவரும் கலந்து கொள்ள நேற்று செப்டம்பர் 13-ஆம் தேதி கோலாகலமாக நடைபெற்றது. தொடர்ந்து இன்று செப்டம்பர் 14 முதல் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் ஷேஷம் மைக்கில் ஃபாத்திமா படப்பூஜை வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அந்த படப்பூஜை வீடியோ இதோ…
 

Sesham Mike-il Fathima Poojai video ✨

Shoot begins today 😊@kalyanipriyan @Jagadishbliss @Sudhans2017 @manuckumar4 @HeshamAWMusic @dop_santha #KiranDas @Aiish_suresh #RenjithNair @aneeshgmenon @FeminaGeorge @PassionStudios_ @propratheesh @thinkmusicindia #SeshamMikeilFathima pic.twitter.com/vqiRJcywMI

— TheRoute (@TheRoute) September 14, 2022