தனக்கே உரித்தான ஸ்டைலான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து, தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நாயகர்களில் ஒருவராக திகழும் நடிகர் சிலம்பரசன்.TR, கடைசியாக இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து வெளிவந்த மாநாடு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பைப் பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. 

தொடர்ந்து சிலம்பரசன்.TR நடிப்பில் வெளிவர இருக்கும் அடுத்தடுத்த திரைப்படங்கள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் அடுத்ததாக இயக்குனர் ஒபெலி.N.கிருஷ்ணா இயக்கத்தில் சிலம்பரசன்.TR மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள பத்து தல திரைப்படம் வருகிற டிசம்பர் 14ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் - சிலம்பரசன்.TR - ஏ.ஆர்.ரஹ்மான் வெற்றிக் கூட்டணியில் 3-வது படமாக தயாராகியுள்ளது வெந்து தணிந்தது காடு திரைப்படம். சிலம்பரசன்.TR உடன் இணைந்து சித்தி இத்தாலி கதாநாயகியாக நடிக்க, ராதிகா சரத்குமார், கயடு லோஹர், சித்திக் மற்றும் நீரஜ் மாதவ் ஆகியோர் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். 

சித்தார்த்தா நுன்னி ஒளிப்பதிவில், வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்கு ஆன்டனி படத்தொகுப்பு செய்துள்ளார்.வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி.கே.கணேஷ் அவர்கள் தயாரித்துள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பில் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வெளியிட நாளை செப்டம்பர் 15-ஆம் தேதி ரிலீசாகவுள்ளது. 

லைஃப் ஆஃப் முத்து என்ற பெயரில் வெளியாகும் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் தெலுங்கு வெர்ஷன் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. மேலும் தெலுங்கில் இரண்டு நாட்கள் தாமதமாக செப்டம்பர் 17ஆம் தேதி திரைப்படம் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. வெந்து தணிந்தது காடு தெலுங்கு வெர்ஷன் ட்ரைலர் இதோ…