தமிழ் திரையுலகில் குறிப்பிடப்படும் இசையமைப்பாளராக வளர்ந்து வரும் இசையமைப்பாளர் சித்து குமார், இயக்குனர் சசி இயக்கத்தில் சித்தார்த் மற்றும் ஜீவி பிரகாஷ்குமார் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வெளிவந்த சிகப்பு மஞ்சள் பச்சை திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர்.

இதனையடுத்து சில மாதங்களுக்கு முன்பு ஜீவி பிரகாஷ் குமார் நடிப்பில் வெளிவந்த பேச்சுலர் திரைப்படத்திற்கும் சித்து குமார் இசையமைத்தார். இவரது இசையில் வெளிவந்த பேச்சுலர் படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக மீண்டும் ஜீவி பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடிக்கும் 13 படத்திற்கும் சித்து குமார் இசையமைக்கிறார்.

மேலும் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் கண்ணை நம்பாதே, இயக்குனர் சசி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் கதாநாயகனாக நடிக்கும் நூறு கோடி வானவில் உள்ளிட்ட பல படங்களுக்கு சித்து குமார் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடைய இசை அமைப்பாளர் சித்து குமாரின் திருமணம் இன்று செப்டம்பர் 14ஆம் தேதி கோலாகலமாக நடைபெற்றது.

இசையமைப்பாளர் சித்து குமார் - ராஜி எனும் எம்பிஏ பட்டதாரியை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணத்திற்கு சமூகவலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. கலாட்டா குழுமம் தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. இசையமைப்பாளர் சித்து குமார் - ராஜி திருமண புகைப்படங்கள் இதோ…
 

 

View this post on Instagram

A post shared by Angel Mary (@tales.by.angel)

 

View this post on Instagram

A post shared by Angel Mary (@tales.by.angel)