தமிழ் திரையுலகின் குறிப்பிடப்படும் இயக்குனர்களாக திகழும் இயக்குனர்கள் ஜோடியான புஷ்கர் & காயத்ரி இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் மாதவன் இணைந்து நடித்த விக்ரம் வேதா திரைப்படம் சினிமா டிக்கெட்டுகளுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்பட்ட கடினமான நேரத்தில் வெளியாகி ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட்டானது. 

சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட விக்ரம் வேதா திரைப்படம் இந்திய அளவில் பலரது கவனத்தையும் ஈர்த்தது. அதன் தொடர்ச்சியாக விக்ரம் வேதா திரைப்படம் பாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட்டது. இயக்குனர்கள் புஷ்கர் மற்றும் காயத்ரி இயக்கத்தில் தமிழில் மாதவன் நடித்த விக்ரம் கதாபாத்திரத்தில் சைஃப் அலி கான் நடிக்க விஜய் சேதுபதி நடித்த வேதா கதாபாத்திரத்தில் ஹிரித்திக் ரோஷன் நடித்துள்ளார். 

மேலும் ராதிகா அப்தே, ரோஹித் சரஃப் மற்றும் ஷரீப் ஹாஷ்மி ஆகியோர் விக்ரம் வேதா படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். PS.வினோத் ஒளிப்பதிவில், விக்ரம் வேதா ஹிந்தி ரீமேக் படத்திற்கு விஷால் மற்றும் ஷேகர் பாடல்களுக்கு இசையமைக்க, சாம்.CS பின்னணி இசை சேர்த்துள்ளார். 

Y NOT ஸ்டூடியோஸ், ரிலையன்ஸ் என்டர்டைன்மென்ட் , Friday Filmworks மற்றும் T-Series Films இணைந்து தயாரித்துள்ள விக்ரம் வேதா திரைப்படம்  வருகிற செப்டம்பர் 30ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில் விக்ரம் வேதா பாலிவுட் ரீமேக் திரைப்படத்தின் அதிரடியான மேக்கிங் வீடியோ சற்று முன்பு வெளியானது. அந்த மேக்கிங் வீடியோ இதோ…