கலக்கப்போவது யாரு தொடரின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தவர் வடிவேல் பாலாஜி.கலக்கப்போவது யாரு தொடரில் வடிவேலுவை இமிடேட் செய்த இவர் ரசிகர்களால் வடிவேல் பாலாஜி என்று அழைக்கப்பட்டார்.தொடர்ந்து விஜய் டிவியின் சூப்பர்ஹிட் நிகழ்ச்சியான அது இது எது நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.

இதனை தொடர்ந்து முனி,கோலமாவு கோகிலா உள்ளிட்ட சில படங்களிலும் நடித்து அசத்தியுள்ளார் .45 வயதான இவர் கடந்த செப்டம்பர் 10ஆம் தேதி மாரடைப்பு காரணாமாக காலமானார்.இவரது மறைவு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பலரையும் சிரிக்க வைத்த வடிவேல் பாலாஜி இவ்வளவு சீக்கிரம் தங்களை விட்டு பிரிவார் என்று எதிர்பார்க்கவில்லை என்று ரசிகர்களும் பிரபலங்களும் வருத்தம் தெரிவித்தனர்.விஜய் டிவியில் வடிவேல் பாலாஜிக்கு மரியாதையை செலுத்தும் விதமாக ஒரு நிகழ்ச்சியை நடத்தினர்.

தற்போது விறுவிறுப்பாக சென்று வரும் கலக்கப்போவது யாரு சீசன் 9-ல் பைனல் இந்த வாரம் ஒளிபரப்பாகிறது,அதில் வெற்றியாளருக்கு வழங்கும் விருதை வடிவேல் பாலாஜி பெயரில் அறிவித்து கெளரவம் செய்துள்ளது விஜய் டிவி.இதற்கான ப்ரோமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளனர்.இந்த ப்ரோமோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்