ஹரிஷ் கல்யாண் - இந்துஜா இணையும் புதிய த்ரில்லர் படம்... கவனம் ஈர்க்கும் டைட்டில் லுக் போஸ்டர் இதோ!

ஹரிஷ் கல்யாண் இந்துஜா இணையும் பார்க்கிங் பட டைட்டில் லுக் போஸ்டர்,harish kalyan indhuja in parking movie title look poster out now | Galatta

நடிகர் ஹரிஷ் கல்யாண் மற்றும் நடிகை இந்துஜா இணைந்து நடிக்கும் புதிய த்ரில்லர் திரைப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியானது. தமிழ் சினிமாவின் பிரபல கதாநாயகர்களில் ஒருவராக திகழும் நடிகர் ஹரிஷ் கல்யாண் வில் அம்பு, பியார் பிரேமா காதல், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், தாராள பிரபு உள்ளிட்ட பல படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் தனக்கென தனி இடம் பிடித்தார். கடைசியாக ஹரிஷ் கல்யாண் நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளிவந்த ஓ மணப் பெண்ணே திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து ஹரிஷ் கல்யாண் நடிப்பில் அசத்தலான திரைப்படங்கள் வெளிவர தயாராகி வருகின்றன. 

அந்த வகையில் இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் மகேந்திரசிங் தோனி அவர்கள் முதல்முறை தயாரிப்பாளராக தனது தோனி என்டர்டெயின்மென்ட் சார்பில் தயாரிக்கும் LGM (Let's Get Married) படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இயக்குனர் ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் லவ் டுடே நாயகி இவானா இணைந்து நடித்திருக்கும் LGM திரைப்படத்தை வரும் ஜூலை மாத இறுதியில் வெளியிடப்பட குழுவினர் திட்டமிட்டுள்ளனர். முன்னதாக இயக்குனர் சசி இயக்கத்தில் ரொமான்டிக் திரைப்படமாக ஹரிஷ் கல்யாண் நடித்திருக்கும் நூறு கோடி வானவில் மற்றும் இயக்குனர் சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஆக்ஷன் திரில்லர் படமாக நடித்திருக்கும் டீசல் திரைப்படமும் விரைவில் வெளிவர தயாராகி வருகின்றன. இதனிடையே சர்தார் படத்தின் தயாரிப்பு நிறுவனமான பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ் உடன் இணைந்துள்ள ஹரிஷ் கல்யாண் லப்பர் பந்து எனும் புதிய திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் தற்போது நடித்து வருகிறார். 

இந்த வரிசையில் அடுத்ததாக நடிகை இந்துஜா உடன் இணைந்து ஹரிஷ் கல்யாண் நடிக்கும் புதிய திரைப்படம் தான் பார்க்கிங். விக்ரம் & லியோ படங்களில் வசனகர்த்தாவும் பிரபல இயக்குனருமான இயக்குனர் ரத்தினகுமார் இயக்கத்தில் வெளிவந்த மேயாத மான் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமான நடிகை இந்துஜா தொடர்ந்து மெர்குரி, 60 வயது மாநிறம், மகாமுனி மற்றும் தளபதி விஜயின் பிகில் உள்ளிட்ட திரைப்படங்களில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக கடந்த 2022 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளிவந்த நானே வருவேன் திரைப்படத்திலும் கதாநாயகியாக இந்துஜா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதனைத் தொடர்ந்து தற்போது அறிமுக இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகும் பார்க்கிங் திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து கதையின் நாயகியாக இந்துஜா நடிக்கிறார். பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரி இணைந்து வழங்க வித்தியாசமான திரில்லர் திரைப்படமாக தயாராக இருக்கும் இந்த பார்க்கிங் திரைப்படத்திற்கு ஜிஜு சன்னி ஒளிப்பதிவில் பிலோமின்ராஜ் படத்தொகுப்பு செய்ய, சாம்.சி.எஸ் இசையமைத்திருக்கிறார். வெகு விரைவில் பார்க்கிங் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், தற்போது பார்க்கிங் திரைப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர். பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கும் அந்த டைட்டில் லுக் போஸ்டர் இதோ…
 

Ovvoru padam’mum, enakku unga ellarodayum connect panradhukaana oru Vaipu & here I am with another! 🙏

So happy to launch the title look of my next film #PARKING.

First look coming soon. Need all your love & support as always. ❤️🤗 #AnbuMattumeKudupom@Actress_Indhujapic.twitter.com/ISreV9RM7B

— Harish Kalyan (@iamharishkalyan) June 23, 2023

‘அவர் MINDல ஒன்னு செட் ஆயிடுச்சு!’ லியோ முடிவதற்கு முன் தளபதி 68 படத்தை விஜய் அறிவித்தது பற்றி தயாரிப்பாளர் தனஞ்செயன் பதில்! வீடியோ இதோ
சினிமா

‘அவர் MINDல ஒன்னு செட் ஆயிடுச்சு!’ லியோ முடிவதற்கு முன் தளபதி 68 படத்தை விஜய் அறிவித்தது பற்றி தயாரிப்பாளர் தனஞ்செயன் பதில்! வீடியோ இதோ

'கஸ்டடி பெருசா போகல.. ஆனா!'- வெங்கட் பிரபுவின் தளபதி68 படத்தை விஜய் தேர்ந்தெடுத்தது ஏன்? தயாரிப்பாளர் தனஜெயனின் விளக்கம் இதோ!
சினிமா

'கஸ்டடி பெருசா போகல.. ஆனா!'- வெங்கட் பிரபுவின் தளபதி68 படத்தை விஜய் தேர்ந்தெடுத்தது ஏன்? தயாரிப்பாளர் தனஜெயனின் விளக்கம் இதோ!

'அடேங்கப்பா வெறும் 12 நிமிடங்களா?'- தளபதி விஜயின் லியோ பட ஃபர்ஸ்ட் லுக் செய்த பக்கா மாஸ் சாதனை... கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!
சினிமா

'அடேங்கப்பா வெறும் 12 நிமிடங்களா?'- தளபதி விஜயின் லியோ பட ஃபர்ஸ்ட் லுக் செய்த பக்கா மாஸ் சாதனை... கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!