தளபதி விஜய் உடன் புட்ட பொம்மா பாட்டுக்கு ஆடிய பூஜா ஹெக்டே... சர்ப்ரைஸாக வந்த பீஸ்ட் பட UNSEEN ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ!

தளபதி விஜய் உடன் புட்ட பொம்மா பாட்டுக்கு பூஜா ஹெக்டே ஆடிய வீடியோ,thalapathy vijay unseen butta bomma dance video from beast movie shoot | Galatta

இதுவரை யாரும் பார்த்திராத பீஸ்ட் திரைப்படத்தின் புதிய ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இதில் பிரபலமான புட்ட பொம்மா பாட்டிற்கு தளபதி விஜயுடன் பூஜா ஹெக்டே ஆடி இருக்கிறார். ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் விரும்பக்கூடிய கதாநாயகர்களில் ஒருவராக திகழும் தளபதி விஜய் தற்போது தனது திரைப்பயணத்தில் 67 ஆவது படமாக தயாராகும் லியோ திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். மாஸ்டர் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் லியோ திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கிறது. கடைசியாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன், நடித்து வெளிவந்த விக்ரம் திரைப்படம் கடந்த 2022 ஆம் ஆண்டு மிகப்பெரிய பிளாக் பஸ்டராக வெற்றி பெற்றதும், கைதி - விக்ரம் படங்கள் இருக்கும் LCUம் லியோ திரைப்படத்தின் மீது எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளை கிளப்பியுள்ளன.

தளபதி விஜய் உடன் நீண்ட இடைவெளிக்கு பிறகு திரிஷா லியோ படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். தளபதி விஜய் மற்றும் திரிஷா இருவருக்கும் அவர்களது திரைப் பயணத்தில் லியோ திரைப்படம் 67 வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், மனோபாலா மற்றும் ஜார்ஜ் மர்யன் ஆகியோர் லியோ படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். முன்னணி ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவில், ஃபிலாமின் ராஜ் படத்தொகுப்பு செய்ய, N.சதீஷ்குமார் கலை இயக்குனராக பணியாற்ற பக்கா அதிரடி ஆக்சன் திரைப்படமாக தயாராகும் லியோ திரைப்படத்தில் ஸ்டண்ட் இயக்குனர்களாக அன்பறிவு மாஸ்டர்கள் பணியாற்ற, தினேஷ் மாஸ்டர் நடன இயக்குனராக பணியாற்றுகிறார். 

கடந்த ஜனவரி மாதம் லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு பிப்ரவரி மாதத்தின் ஆரம்பத்தில் தொடங்கி மார்ச் இறுதி வரை தொடர்ச்சியாக 50 நாட்கள் காஷ்மீரில் நடைபெற்றது. தொடர்ந்து அடுத்த கட்ட படப்பிடிப்பாக தற்போது சென்னையில் லியோ பட ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. இந்த 2023ம் ஆண்டு வருகிற அக்டோபர் 19ஆம் தேதி ஆயுத பூஜை வெளியீடாக தளபதி விஜயின் லியோ திரைப்படம் ரிலீஸ் ஆகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.முன்னதாக நேற்று ஜூன் 22 ஆம் தேதி தளபதி விஜயின் பிறந்தநாளில் வெளிவந்த லியோ பட முதல் பாடலான நா ரெடி பாடல் சோசியல் மீடியாவை அதிர வைத்திருக்கிறது. இந்த நிலையில் நடிகை பூஜா ஹெக்டே, இயககுனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் தளபதி விஜய் உடன் இணைந்து நடித்த போது படப்பிடிப்பு தளத்தில் சூப்பர் ஹிட் தெலுங்கு பாடலான புட்ட பொம்ம பாடலுக்கு நடனமாடிய ஒரு வீடியோவை தற்போது பகிர்ந்து இருக்கிறார். இதுவரை யாரும் பார்த்திராத இந்த சர்ப்ரைஸ் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. அந்த வீடியோ இதோ…
 

 

View this post on Instagram

A post shared by Pooja Hegde (@hegdepooja)

'கஸ்டடி பெருசா போகல.. ஆனா!'- வெங்கட் பிரபுவின் தளபதி68 படத்தை விஜய் தேர்ந்தெடுத்தது ஏன்? தயாரிப்பாளர் தனஜெயனின் விளக்கம் இதோ!
சினிமா

'கஸ்டடி பெருசா போகல.. ஆனா!'- வெங்கட் பிரபுவின் தளபதி68 படத்தை விஜய் தேர்ந்தெடுத்தது ஏன்? தயாரிப்பாளர் தனஜெயனின் விளக்கம் இதோ!

'அடேங்கப்பா வெறும் 12 நிமிடங்களா?'- தளபதி விஜயின் லியோ பட ஃபர்ஸ்ட் லுக் செய்த பக்கா மாஸ் சாதனை... கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!
சினிமா

'அடேங்கப்பா வெறும் 12 நிமிடங்களா?'- தளபதி விஜயின் லியோ பட ஃபர்ஸ்ட் லுக் செய்த பக்கா மாஸ் சாதனை... கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

தளபதி விஜயின் லியோ ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸில் லோகேஷ் கனகராஜ் 3ஆண்டுகளுக்கு பின் முதல்முறை செய்த மாற்றம்! விவரம் உள்ளே
சினிமா

தளபதி விஜயின் லியோ ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸில் லோகேஷ் கனகராஜ் 3ஆண்டுகளுக்கு பின் முதல்முறை செய்த மாற்றம்! விவரம் உள்ளே