விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான தொடர்களில் ஒன்று ராஜா ராணி.இந்த தொடரில் ஹீரோவாக சஞ்சீவ் நடித்த சஞ்சீவ் பெரிய வரவேற்பை பெற்று ரசிகர்கள் மத்தியில் பிரபாலமானவராக மாறினார்,அடுத்ததாக விஜய் டிவியின் காற்றின் மொழி தொடரில் நடித்தார் சஞ்சீவ்.

கன்னடத்தில் ஒளிபரப்பான Avanu Matte Shravani என்ற சூப்பர்ஹிட் சீரியல் மூலம் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தவர் சைத்ரா ரெட்டி.இதனை தொடர்ந்து கல்யாணம் முதல் காதல் வரை தொடரில் இறுதியில் இணைந்து தமிழில் தனது என்ட்ரியை கொடுத்தார் சைத்ரா ரெட்டி.இதனை அடுத்து ஜீ தமிழின் பெரிய ஹிட் தொடரான யாரடி நீ மோஹினி தொடரில் நடித்து அசத்தினார்.

சன் டிவியில் சமீபத்தில் ஒளிபரப்பை தொடங்கி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வரும் தொடர் கயல்.இந்த தொடரில் சஞ்சீவ் ஹீரோவாக நடித்து அசத்தி வருகிறார்.சைத்ரா ரெட்டி இந்த தொடரில் ஹீரோயினாக நடித்து அசத்தி வருகிறார்.200 எபிசோடுகளை கடந்து இந்த தொடர் ரசிகர்களின் ஆதரவோடு விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

பல நட்சத்திரங்கள் இந்த தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர்.இந்த தொடரில் சஞ்சீவின் அம்மாவாக நடித்து வந்த பிரபல நடிகை காயத்ரி ஜெயராமன் சில காரணங்களால் விலகுவதாக சில மாதங்களுக்கு முன் தெரிவித்தார்.தற்போது இவருக்கு பதிலாக நடிகை உமா ரியாஸ் இணைந்துள்ளார்,இவரது எபிசோடுகள் ஒளிபரப்பை தொடங்கவுள்ளன.