விரைவில் நிறைவுக்கு வரும் சன் டிவியின் சூப்பர்ஹிட் சீரியல் !
By Aravind Selvam | Galatta | June 18, 2022 13:28 PM IST
சன் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களுக்கு எப்போதும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைக்கும்.அதில் நடிக்கும் புதுமுகங்கள் கூட ரசிகர்கள் மத்தியில் பிரபலங்களாக வெகு விரைவில் வளர்ந்து விடுவார்கள்.கொரோனா முதல் அலையை அடுத்து தொடங்கப்பட்ட புதிய தொடர் பூவே உனக்காக.தொடங்கப்பட்டது முதல் ரசிகர்கள் மத்தியில் அதீத வரவேற்பை பெற்று வருகிறது.
அஷீம்,வர்ஷினி,சாயாசிங் உள்ளிட்டோர் முன்னணி வேடங்களில் நடித்து வருகின்றனர்.இந்த தொடரில் நடித்து வந்த முன்னணி நட்சத்திரங்கள் பலர் மாற்றப்பட்டனர்.சில முக்கிய நடிகர்கள் விலகினாலும் கதையின் விறுவிறுப்பு குறையாமல் சீரியல் குழுவினர் பார்த்துக்கொண்டு வருகின்றனர்.
பல விறுவிறுப்பான திருப்பங்களுடன் இந்த தொடர் 600 எபிசோடுகளை நெருங்கி வருகிறது.இந்த தொடரில் நடித்து வந்த பல நட்சத்திரங்கள் மாற்றப்பட்டு நேரம் மாற்றப்பட்டு பல சோதனைகளை கடந்து இந்த தொடர் ஒளிபரப்பாகி வந்தது.
தற்போது இந்த தொடரின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக இந்த தொடர் விரைவில் நிறைவுக்கு வரவுள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது.எதிர்பாராத சில காரணங்களால் இந்த தொடர் பாதியிலேயே கைவிடப்படுகிறது என்ற தகவல் கிடைத்துள்ளது.இதனால் இந்த தொடரின் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.