லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் விக்ரம்.ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் இந்த படத்தினை தயாரித்துள்ளனர்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படம் ஜூன் 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

கமலுடன் இணைந்து விஜய்சேதுபதி,பஹத் பாசில் என மேலும் 2 சூப்பர் நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.இவர்களுடன் சூர்யாவும் இணைந்து நடித்திருந்தார்.இந்த படம் பெரிய எதிர்பார்ப்புக்கிடையே வெளியாகி ரசிகர்கள் மற்றும் பிரபலங்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த படத்தினை ரசிகர்கள் பெரிதளவு கொண்டாடி வருகின்றனர்.பல இடங்களில் இந்த படம் வசூல் சாதனை செய்து வருகிறது.இந்த படம் உலகம் முழுவதும் 300 கோடிகளை வசூல் செய்து பல படங்களின் சாதனைகளை முறியடித்து வருகிறது.இன்னும் பல சாதனைகளை நிகழ்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பெரிய வெற்றியை கொண்டாடும் வகையில் தியேட்டர் உரிமையாளர்கள்,விநியோகஸ்தர்கள்,பத்திரிகை நபர்கள் உள்ளிட்டோருடன் ஒரு சிறப்பு சந்திப்பு மற்றும் விருந்தினை கமல்ஹாசன் மற்றும் படக்குழுவினர் கொடுத்துள்ளனர்.

பொதுவாக லோகேஷ் படங்கள் என்றாலே சாப்பாட்டுக்கு முக்கியத்துவம் இருக்கும் காட்சிகள் சில இருக்கும்.அதேபோல விக்ரம் படத்திற்கும் பிரியாணிக்கும் ஒரு செம கனெக்ஷன் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தில் முதல் அறிவிப்பாக வந்ததே கமல் பலருக்கும் பிரியாணி விருந்து கொடுப்பது போல அமைந்து இருக்கும்.படத்திலும் பிரியாணி சமைப்பது போல ஒரு காட்சி இருக்கும்.தற்போது நடந்த ஆல் டைம் வெற்றி விழாவில் அனைவருக்கும் பிரியாணி விருந்து கொடுத்துள்ளனர் படக்குழுவினர்.படத்தின் துவக்கம் முதல் வெற்றி வரை பிரியாணி சென்டிமென்டை தொடர்ந்து கடைபிடித்து வருகின்றனர்.