ஆளவந்தான் ரீ-ரிலீஸ்: உலகம் முழுக்க மிக பிரம்மாண்டமாக வெளிவரும் உலகநாயகன் கமல்ஹாசனின் மிரட்டலான படைப்பு... மாஸ் அறிவிப்பு இதோ!

உலகநாயகன் கமல்ஹாசனின் ஆளவந்தான் பட ரீ-ரிலீஸ் அறிவிப்பு,ulaganayagan kamal hassan in aalavandhan re release announcement | Galatta

உலகநாயகன் கமல்ஹாசன் திரைப்பயணத்தில் மிக முக்கிய படங்களில் ஒன்றான ஆளவந்தான் திரைப்படம் உலகம் முழுக்க மிக பிரம்மாண்டமாக ரிலீசாக இருப்பதாக ஆளவந்தான் படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி S தாணு அவர்கள் அறிவித்திருக்கிறார். இது குறித்து தனது X பக்கத்தில், “எழிலோடும்.. பொலிவோடும்.. ஆளவந்தான் விரைவில், வெள்ளித்திரையில்..” எனக் குறிப்பிட்டு ஆளவந்தான் திரைப்படத்தின் அதிரடியான போஸ்டர் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்த போஸ்டரில் “விரைவில் உலகம் முழுக்க ஆயிரம் திரையரங்குகளில் ஆளவந்தான்… இன்று 22 ஆம் ஆண்டில்” என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆளவந்தான் திரைப்படம் ரிலீஸ் ஆகி இன்றோடு 22 ஆண்டுகள் நிறைவடைந்து இருக்கும் நிலையில், வெகுவிரைவில் உலகம் முழுக்க மிக பிரம்மாண்டமாக ஆயிரம் திரையரங்குகளில் ஆளவந்தான் படத்தை ரீ ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருப்பதாக தயாரிப்பாளர் கலைப்புலி S தாணு அவர்கள் அறிவித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அவரது அந்த மாஸ் அறிவிப்பு இதோ…

 

எழிலோடும்..பொழிலோடும்..#Aalavandhan விரைவில் வெள்ளித்திரையில்.@Suresh_Krissna pic.twitter.com/4WD3ZcxGd9

— Kalaippuli S Thanu (@theVcreations) November 14, 2023

கடந்த 2001 ஆம் ஆண்டு உலகநாயகன் கமல்ஹாசன் இரட்டை வேடங்களில் நடித்து வெளிவந்த திரைப்படம் ஆளவந்தான். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை வைத்து அண்ணாமலை, வீரா, பாட்ஷா, பாபா உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா அவர்களின் முதல் படம் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த சத்யா. அதன் பிறகு உலக நாயகன் கமல்ஹாசன் உடன் மீண்டும் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இணைந்த திரைப்படம் தான் ஆளவந்தான். உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களின் கதை, திரைக்கதை, வசனத்தில் வித்தியாசமான சைக்கலாஜிக்கல் ஆக்சன் திரில்லர் படமாக வெளிவந்த இந்த ஆளவந்தான் திரைப்படம் வெளிவந்த சமயத்தில் மிகப்பெரிய கவனத்தை ஈர்க்கத் தவறிய போதும்  பின்னாளில் ரசிகர்களால் வெகுவாக கொண்டாடப்பட்டது. சமீப காலமாக உச்ச நட்சத்திர நாயகர்களின் மிக முக்கிய திரைப்படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆன வேட்டையாடு விளையாடு திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரீ ரிலீஸ் ஆகி பெரும் வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து விரைவில் இந்த ஆளவந்தான் திரைப்படமும் ரிலீஸ் ஆக இருப்பது குறிப்பிடத்தக்கது.

கடைசியாக கடந்த 2022 ஆம் ஆண்டு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் நடித்து வெளிவந்த விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து அடுத்தடுத்து கமலஹாசன் நடிப்பில் வெளிவர இருக்கும் ஒவ்வொரு திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கின்றன. அந்த வரிசையில் முதலாவதாக பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் நடித்திருக்கும் இந்தியன் 2 திரைப்படம் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது. அதை தொடர்ந்து விரைவில் இந்தியன் 3 திரைப்படமும் தயாராகி வெளிவர இருப்பதாக தகவல்கள் வெளி வருகின்றன. இது குறித்து அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக நாயகன் படத்திற்கு பிறகு நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் இயக்குனர் மணிரத்தினம் உடன் இணைந்து இருக்கும் உலக நாயகன் கமல்ஹாசன் THUG LIFE எனும் அதிரடி கேங்ஸ்டர் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் சமீபத்தில் வெளிவந்த திரைப்படத்தின் அறிவிப்பு டீசர் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. தொடர்ந்து இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் உருவாகும் KH233 எனும் திரைப்படத்திலும் அடுத்து உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்க இருக்கிறார்.