ஜப்பான்: 'நான் திருடன் என்றால் நீங்கள் எல்லாம் யார்?'- இசை வெளியீட்டு விழாவில் கேட்ட கேள்வி யாருக்காக? ராஜுமுருகனின் பதில் இதுதான்! வீடியோ உள்ளே

ஜப்பான் இசை வெளியீட்டு விழாவில் கேட்ட கேள்விக்கு ராஜுமுருகன் பதில்,raju murugan opens about karthi in japan audio launch speech | Galatta

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக திகழும் நடிகர் கார்த்தியின் 25வது படமாக கடந்த நவம்பர் 10ஆம் தேதி தீபாவளி வெளியீடாக ரிலீஸான திரைப்படம் ஜப்பான். இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த சில தினங்களுக்கு முன்பு நேர உள் விளையாட்டு அரங்கில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது இந்த விழாவில் பேசிய இயக்குனர் ராஜு முருகன் அவர்கள் ஜப்பான் படத்தில் அந்த ஜப்பான் கதாபாத்திரம் “நான் திருடன் என்றால் நீங்கள் எல்லாம் யார்?’ என்று கேட்கும் என தெரிவித்திருந்தார். இந்த கேள்வி யார் மீதான கேள்வி என்பது குறித்த கேள்விக்கு தற்போது நமது கலாட்டா தமிழ் சேனலுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் இயக்குனர் ராஜு முருகன் பதில் அளித்திருக்கிறார். அப்படி பேசும் போது,

“இசை வெளியீட்டு விழாவில் நீங்கள் பேசிய போது ‘நான் திருடன் என்றால் நீங்கள் எல்லாம் யார்?’ என ஜப்பான் கேள்வி கேட்கப் போகிறான் என சொல்லியிருந்தீர்கள் இது யாரை பார்த்து கேட்கப்படும் கேள்வி அரசாங்கத்தை பார்த்தா? அல்லது அரசியல்வாதிகளை பார்த்தா? எனக் கேட்ட போது “அப்படி இல்லை நான் ஏற்கனவே சொன்ன மாதிரி தான் சார்லி சாப்ளின், எம்.ஆர்.ராதா அவர்களைப் போல எப்படி கிண்டலாக நையாண்டியாக இந்த விஷயத்தை பேசுகிறோம் என்பது தான் எனது அடிப்படையாக இருந்தது. இது சிஸ்டம் அரசியல்வாதிகள் என்றில்லாமல் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் பார்த்து கேட்பதுதான் திருடன் என இந்த சமூகத்தில் ஒருத்தன் இருக்கிறான் என்றால் அது நம் எல்லாரையும் சேர்த்து தான் கேட்க வேண்டும் நாம் ஓட்டுக்கு பணம் வாங்குகிறோம். ஆனால் சிஸ்டம் தவறு என்று நாமே பேசுகிறோம். இப்படி அடிப்படையாக நிறைய முரண்கள் இருக்கிறது. அப்படி என்றால் நாம் எல்லோரையுமே பார்க்க வேண்டி இருக்கிறது. எனவே அரசியல்வாதிகளை நோக்கி கேட்க வேண்டிய கேள்விகளை ஜனங்களை நோக்கியும் கேட்க வேண்டியிருக்கிறது. மக்களை ஒரு அமைப்பாக திரட்ட வேண்டிய தேவை இருக்கிறது. அதைத்தான் தொடர்ந்து நிறைய பேர் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள். எனவே இது ஒட்டுமொத்த பொது சமூகத்தையும் நோக்கி வைக்கப்பட்ட கேள்விதான்.” என தெரிவித்துள்ளார். இன்னும் பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்ட ஜப்பான் படத்தின் இயக்குனர் ராஜு முருகன் அவர்களின் அந்த முழு பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணலாம்.

 

தனது திரைபயணத்தில் 25வது திரைப்படமாக வெளிவந்திருக்கும் இந்த ஜப்பான் திரைப்படத்தில் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிகர் கார்த்தி நடித்திருக்கிறார். தொடர்ந்து வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர் கார்த்தியின் வழக்கமான மேனரசங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு புதுவித மேனரிசம். அதற்கான வித்தியாசமான குரல் என ஜப்பான் என்ற கதாபாத்திரத்தில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறார் கார்த்தி. இயக்குனர் ராஜு முருகனின் இயக்கத்தில் நடிகர் கார்த்தி உடன் இணைந்து விஜய் மில்டன், சுனில், கே.எஸ்.ரவிக்குமார், பவா செல்லத்துரை, வாகை சந்திரசேகர் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ஜப்பான் படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார்.