ஜிகர்தண்டா டபுள் X SPOILER ALERT: SJ சூர்யா கேரக்டரின் பின்னணியில் இருக்கும் சுவாரசியத்தை பகிர்ந்த கார்த்திக் சுப்பராஜ்! ட்ரெண்டிங் வீடியோ இதோ

ஜிகர்தண்டா XX SJ சூர்யா கேரக்டரின் சுவாரசியத்தை பகிர்ந்த கார்த்திக் சுப்பராஜ்,karthik subbaraj about sj suryah character in jigarthanda xx | Galatta

கடந்த நவம்பர் 10ம் தேதி வெளிவந்து ஒட்டு மொத்த சினிமா ரசிகர்களையும் தீபாவளி கொண்டாட வைத்த திரைப்படம் தான் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் ஜிகர்தண்டா டபுள் X. இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் அட்டகாசமான கதைக்களத்தில் சிறந்த இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் SJ சூர்யாவின் மிரட்டலான நடிப்பில் வெளிவந்திருக்கும் ஜிகர்தண்டா டபுள் X திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது

இந்த நிலையில் நமது கலாட்டா பிளஸ் சேனலில் திரு.பரத்வாஜ் ரங்கன் அவர்களோடு லைட்ஸ் கேமரா அனாலிசிஸ் சிறப்பு நேர்காணலில் கலந்து கொண்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ், ஜிகர்தண்டா XX படம் குறித்த பல சுவாரஸ்யமான தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார் அந்த வகையில், “SJ சூர்யா அவர்களின் கதாபாத்திரம், சத்தியஜித் ரேவின் உதவி இயக்குனர் என சொல்கிறீர்கள்... அதில் ஒரு நகைச்சுவை இருக்கிறது. ஏனென்றால் சத்தியஜித் ரே 'அரே சாலா' என்றெல்லாம் சொல்ல மாட்டார் அதுவே சிரிப்பு. ஏன் சத்திய ஜித்ரேவின் உதவி இயக்குனர் என வைத்தீர்கள். ஏன் கே.பாலச்சந்தர், ஸ்ரீதர், ஏ.சி.திரிலோக்சந்தர் என்றெல்லாம் வைக்கவில்லை?” எனக் கேட்டபோது, “அந்த லாஜிக் எப்படி வந்தது என்றால் இவர்களெல்லாம் பெரிய கேங்ஸ்டர்கள். கார்மேகம் என்கிறவர் அரசியலில் இருக்கிறார் அவருக்கு கீழ் மிகப் பெரிய கூட்டம் இருக்கிறது. திடீரென இவர் (ராகவா லாரன்ஸின் கதாபாத்திரம்) படம் எடுக்கலாம் என சொல்கிறார். எனவே நிறைய பேரை வரவைத்து கதைகள் கேட்டுக் கொண்டிருக்கிறார். ஆனால் இவர் (எஸ்.ஜே.சூர்யாவின் கதாபாத்திரம்) சினிமா எடுப்பது பற்றி எதுவும் தெரியாதவர். அவருக்கு அதை எடுக்க வேண்டும் என்ற எந்த எண்ணமும் இல்லை. ஆனால் அவர் இவரை (ராகவா லாரன்ஸின் கதாபாத்திரம்) இம்ப்ரஸ் செய்ய வேண்டும் அதன் பிறகு அவரை வைத்து ஒரு படம் எடுக்க வேண்டும். இதில் என்ன ஒரு லாஜிக் இருக்க வேண்டும் என்று நாங்கள் யோசித்தோம் ஏனென்றால் ஒருவேளை கே.பாலச்சந்தர் அவர்களின் உதவி இயக்குனர் என்றால் கார்மேகம் அவரது தரப்பிலிருந்து ஈசியாக விசாரித்து விட முடியும். இவர் நிஜமாகவே கே.பாலச்சந்தர் அவர்களின் உதவி இயக்குனரா என்று... அதனால் இவர்களால் எட்ட முடியாத தூரத்தில் இருக்கும் ஒருவர் எங்களுக்கு தேவைப்பட்டது. இதில் பாதி பேருக்கு தெரியாது… சத்தியஜித் ரே என்றாலே யாருக்கும் தெரியாது. அதில் ஒரு சிறிய டயலாக் எடிட்டிங்கில் மிஸ் ஆகிவிட்டது. கார்மேகத்திடம் முதல் முறை அறிமுகப்படுத்தும்போது, இவரிடம் கேட்பார், “யாரிடம் நீங்கள் உதவி இயக்குனராக பணியாற்றினீர்கள்” என்று அதற்கு இவர் “சத்தியஜித்ரே” என்று சொல்லுவார். அதற்கு அருகில் இருக்கும் ஒரு நபரிடம் கார்மேகம் சொல்லுவார் “பாய் அவர் ரொம்ப பெரிய ஆளு” என சொல்லிவிட்டு “எந்த படத்தில் வேலை பார்த்தீர்கள்” என கேட்கும் போது இவர் “பாதாள பாஞ்சாலி” என சொல்லுவார். அதற்கு இவருடைய ஒரு கவுண்டர் டயலாக் இருக்கிறது “அது மிகவும் ஜனரஞ்சகமான ஒரு படமப்பா” என்று சொல்லுவார். இவர்களுக்கு அவ்வளவு தான் அறிவு. எனவே அந்த மாதிரி ஒரு ஆளை வைக்க வேண்டும் என்பதற்காக தான் சத்யஜித்ரே என்று வைத்தோம்.” என தெரிவித்து இருக்கிறார் இன்னும் சுவாரஸ்யமான பல தகவல்களை பகிர்ந்து கொண்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் அந்த முழு பேட்டி இதோ...