கேப்டன் மில்லர்: "நாந்தாண்டா நீதி.."- தனுஷின் அதிரடி ஆக்சன் பட முதல் பாடல் குறித்து வேற லெவல் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்! விவரம் உள்ளே

தனுஷின் கேப்டன் மில்லர் பட முதல் பாடல் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்,dhanush has sung the first song of captain miller movie | Galatta

ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த நடிகர் தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் முதல் பாடல் குறித்த அதிரடி அப்டேட் ஒன்றை இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் பகிர்ந்து இருக்கிறார். அட்டகாசமான பாடலாக வெளிவர இருக்கும் கேப்டன் மில்லர் படத்தின் இந்த முதல் பாடலை நடிகர் தனுஷ் பாடியிருக்கிறார் என ஜிவி பிரகாஷ் குமார் தெரிவித்து தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், 
"நான் உயிரோடு இருக்கும் வரை நீ ஜெயிக்க முடியாது மேலும் இன்று எனக்கு சாக நேரமில்லை" 
“இந்த வரண்ட மண்ணும் குருதி குடிக்கும் … புழுவுக்கெல்லாம் விருந்து படைக்கும் ….”
“நாந்தாண்டா நீதி …. நாந்தாண்டா நீதி ….” 
“கில்லர் கில்லர் கேப்டன் மில்லர் கில்லர் கில்லர் கேப்டன் மில்லர்” 

இந்தப் பாடலை பாடியவர் நமது தனுஷ் எனக் குறிப்பிட்டு இயக்குனர் அருண் மாதேஸ்வரன் மற்றும் தனுஷ் உடன் இருக்கும் தனது புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படம் மற்றும் பதிவு இதோ… 

 

You cannot win when im alive .. and today is not my time to die …

ITS YOURS 🔥🔥🔥

இந்த வரண்ட மண்ணும் குருதி குடிக்கும் … புழுவுக்கெல்லாம் விருந்து படைக்கும் ….

நாந்தாண்டா நீதி ….
நாந்தாண்டா நீதி ….

Killer killer captain miller …..
Killer killer captain miller …..… pic.twitter.com/Xi8QnVff2n

— G.V.Prakash Kumar (@gvprakash) November 14, 2023

முதல் அறிவிப்பு வந்த சமயத்தில் இருந்து தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் அடுத்த அடுத்த அறிவிப்புகளுக்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருக்கின்றனர். ராக்கி மற்றும் சாணிக் காயிதம் என தனக்கென தனி பாணியில் மிரட்டலான ஆக்சன் படங்களை கொடுத்து வரும் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் 1930 -களில் நடைபெறும் கதைக் களத்தை கொண்ட பக்கா அதிரடி பீரியட் ஆக்சன் திரைப்படமாக  தனுஷ் நடித்துள்ள அதிரடியான படம் தான் கேப்டன் மில்லர். தனுஷுடன் இணைந்து பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்க, சந்தீப் கிஷன் முன்னணி வேடத்தில் நடிக்கிறார். மேலும் கன்னட நடிகர் சிவராஜ்குமார், நிவேதிதா சதீஷ், ஜான் கொக்கென், இளங்கோ குமரவேல், பிரபல ஹாலிவுட் நடிகர் எட்வர்ட் சொன்னேன்பிலிக் ஆகியோர் கேப்டன் மில்லர் படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவில் நாகூரான் படத்தொகுப்பு செய்யும் கேப்டன் மில்லர் திரைப் படத்திற்கு ஜீவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

சமீபத்தில் வெளிவந்த கேப்டன் மில்லர் திரைப்படத்தின் டீசர் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவும் விரைவில் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளி வருகின்றன. சமீபகாலமாக முன்னணி நட்சத்திர நாயகர்களின் இசை வெளியீட்டு விழாக்கள் சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு மிக பிரம்மாண்டமாக நடைபெற்று வரும் நிலையில், தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவையும் அங்கு நடத்த படக்குழு திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது. அது குறித்த அறிவிப்பும் விரைவில் வெளிவர இருப்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக வருகிற டிசம்பர் 15ஆம் தேதி உலகம் எங்கும் திரையரங்குகளில் மிக பிரம்மாண்டமாக கேப்டன் மில்லர் திரைப்படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது வருகிற 2024 ஆம் ஆண்டு பொங்கல் வெளியீடாக கேப்டன் மில்லர் திரைப்படத்தை வெளியிட பட குழுவினர் முடிவு செய்து சமீபத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.