விஷாலின் மார்க் ஆண்டனியில் மாஸ் என்ட்ரி கொடுத்த ஜெயிலர் பட நடிகர் - அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ..

பிரபல தெலுங்கு நடிகர் சுனில் விஷால் படமான மார்க் ஆண்டனியில் இணைந்தார் - Popular actor sunil on board for mark antony | Galatta

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரும் தயாரிப்பாளருமான விஷால் நடிப்பில் கடந்த ஆண்டு ‘லத்தி’ திரைப்படம் வெளியானது. அதிரடியான ஆக்ஷன் காட்சிகளுடன் உருவான லத்தி திரைப்படத்திற்கு கலவையான விமர்சனம் வந்தது. லத்தி திரைப்படத்தை தொடர்ந்து விஷால் தனது 33 வது திரைப்படமான ‘மார்க் ஆண்டனி’ திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். விஷால் கரடுமுரடான தோற்றத்துடன் துப்பாக்கி ஏந்தி நிற்கும் முதல் பார்வையை கடந்த ஆண்டு வெளியாகி வைரலானது. மினி ஸ்டுடியோ தயாரிப்பில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகும் இப்படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளிவரவுள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கவுள்ளார். 1960 காலக் கட்டத்தில் நடந்த ஒரு கேங்க்ஸ்டர் கதைகளமாக கதை அமையவுள்ள இப்படத்தில் ஏற்கனவே பிரபல நடிகர் எஸ்.ஜே. சூர்யா, ஜாக்கி பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இந்நிலையில் பிரபல தெலுங்கு நடிகர் சுனில் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதுகுறித்து படக்குழு அதிகாரப் பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதையடுத்து தற்போது இணையத்தில் அந்த அறிவிப்பு வைரலாகி வருகின்றது.

Delighted to welcome #Sunil Gaaru on board for #MarkAntony 😎🔥👌🏼 pic.twitter.com/TZsiEDeAb9

— Vishal (@VishalKOfficial) January 21, 2023

இவர் சமீபத்தில் அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா’ திரைப்படம் மூலம் பரவலாக அறியப்பட்டவர். தெலுங்கு துறையில் பல தசாப்தங்களாக பிரபல நகைச்சுவை நடிகராக நடித்து வந்த சுனில். சுமார் நூறுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் பான் இந்திய படமான புஷ்பா படம் மூலம் இந்தியளவு பிரபலமடைந்தார். நகைச்சுவை கதையில் இருந்து விலகி தற்போது பல வித்யாசமான காட்சிகளை தேர்தெடுத்து நடித்து வரும் சுனிலுக்கு பல மொழி திரையுலகில் நடிக்க வாய்ப்பு குவிந்த நிலையில் உள்ளது குறிப்பாக தமிழ் சினிமாவில் சுனிலை நிறைய படங்களில் ஒப்பந்தம் செய்து வருகின்றனர். சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவரவிருக்கும் 'மாவீரன்' படத்திலும், நடிகர் கார்த்தி, இயக்குனர் ராஜு முருகன் கூட்டணியில் உருவாகி வரும் 'ஜப்பான்' படத்திலும் நடித்து வருகிறார். மேலும் முக்கியமாக இந்திய சினிமாவே எதிர்பார்த்து கொண்டிருக்கும் திரைப்படமான சூப்பர் ஸ்டார் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜெயிலர்’ திரைப்படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தெலுங்கு திரையுலகில் வரவேற்பை பெற்று தனகென்ற ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்ட சுனில் தற்போது தமிழில் அதிகம் கவனம் செலுத்தி வருகின்றார். நிச்சயம் நடிகர் சுனில் தமிழ் சினிமாவில் வேறு மாதிரி ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

அஜித் ரசிகர் மரணம்.. CCTV footage எங்கே? – ரோகினி திரையரங்க உரிமையாளர் ரேவந்த் விளக்கம்.. முழு வீடியோ இதோ..
சினிமா

அஜித் ரசிகர் மரணம்.. CCTV footage எங்கே? – ரோகினி திரையரங்க உரிமையாளர் ரேவந்த் விளக்கம்.. முழு வீடியோ இதோ..

துணிவு.. வாரிசு.. யார் REAL WINNER?  - ரோகினி திரையரங்க உரிமையாளர் ரேவந்த் விளக்கம்.. முழு வீடியோ இதோ..
சினிமா

துணிவு.. வாரிசு.. யார் REAL WINNER? - ரோகினி திரையரங்க உரிமையாளர் ரேவந்த் விளக்கம்.. முழு வீடியோ இதோ..

எதிர்பாராததை எதிர்பாருங்கள்.. பிக்பாஸ் 6 அட்டகாசமான அப்டேட் – உற்சாகத்தில் ரசிகர்கள்.. முழு விவரம் இதோ!
சினிமா

எதிர்பாராததை எதிர்பாருங்கள்.. பிக்பாஸ் 6 அட்டகாசமான அப்டேட் – உற்சாகத்தில் ரசிகர்கள்.. முழு விவரம் இதோ!