கேரளா.. காஷ்மீர்.. அடுத்து எங்கே.. - தளபதி 67 லேட்டஸ்ட் அப்டேட்டை பகிர்ந்த பிரபல தயாரிப்பாளர்.. வீடியோ உள்ளே..

தளபதி 67 பட அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர் தனஞ்செயன் - Producer Dhananjayan about thalapathy 67 | Galatta

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் தளபதி விஜய் இணையும் இரண்டாவது திரைப்படம் 'தளபதி 67'. முன்னதாக இவர்கள் கூட்டணியில் உருவான  ‘மாஸ்டர்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து உருவாகும் இந்த படத்திற்கு ரசிகர்கள் தனி எதிர்பார்ப்பை வைத்துள்ளனர். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் முன்னதாக வெளிவந்த 'விக்ரம்' திரைப்படம் LCU என்ற பிரிவை கொண்டு மக்கள் மத்தியில் ஒரு புதுவித கதைக்களத்தை அறிமுகப்படுத்தி இந்த திரைப்படம் ரசிகர்களால் பெரும் எதிர்பார்ப்புடன் உருவாகி வருகிறது

ஏற்கனவே லோகேஷ் கனகராஜின் LCU வில் உலகநாயகன் கமல் ஹாசன், சூர்யா, கார்த்தி, ஃபகத் ஃபாஸில் உள்ளிட்டோர் இணைந்துள்ளனர். இதனையடுத்து தற்போது தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரங்களில் ஒருவரான தளபதி விஜய் அவர்களையும் லோகேஷ் இதில் இணைத்துள்ளனர். இதனையடுத்து படத்திற்கு இந்தியளவில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.  செவன் ஸ்கீரீன் தயாரிப்பில் அனிரூத் இசையமைக்கவுள்ள தளபதி 67 திரைப்படத்தில் விஜயுடன் இணைந்து தற்போது திரிஷா, சஞ்சய் தத், இயக்குனர் கௌதம் மேனன், இயக்குனர் மிஷ்கின் மற்றும் மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் இப்படத்தில் இணைந்துள்ளனர். மேலும் இப்படத்தில் பல நட்சத்திரங்களை இணைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் 50 வயது நபராக இப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் இணையத்தில் தற்போது வைரலானது குறிப்பிடத்தக்கது.  

இந்நிலையில் பிரபல தயாரிப்பாளரும், திரைவிமர்சகருமான தனஞ்செயன் அவர்கள் நமது கலாட்டா தமிழ் பேட்டியில் கலந்து கொண்டு துணிவு மற்றும் வாரிசு படங்களின் வசூல் நிலை மற்றும் தமிழ் திரையுலகில் தற்பதைய நிலை போன்ற  முக்கிய தகவல்களை பகிர்ந்தார். இதில் விஜய் நடித்து வரும் தளபதி 67 அப்டேட் குறித்து கேட்கையில்,

"என்னை பொறுத்தவரை வாரிசு திரைப்படத்தின் தீவிரம் குறையட்டும் னு தளபதி 67 குழு காத்திருக்கிறார்கள். இப்போ தளபதி 67 படத்தின் படப்பிடிப்பு 20 ம் தேதி ஆரம்பித்து முழுவீச்சுடன் எடுக்கவுள்ளனர். அவர்கள் கேரளா, காஷ்மீர் மற்றும் வெளிநாடுகள் போன்ற நிறைய இடத்தில் படமாக்கவுள்ளனர். அந்த படத்தை ஜூன் அல்லது ஜூலை  மாதத்திற்குள் முடிக்க வேண்டுமென்பதே படக்குழுவினரின் திட்டம்." என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆண்டில் விஜய் படமான வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து மேலும் ஒரு திரைப்படம் வெளியாகவுள்ளதால் விஜய் ரசிகர்கள் மற்றும் லோகேஷ் கனகராஜ் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். தயாரிப்பாளர் தனஞ்செயன் பகிர்ந்த மேலும் பல சுவாரஸ்யமான தகவல்களின் முழு வீடியோ இதோ..‌

துணிவு.. வாரிசு.. யார் REAL WINNER?  - ரோகினி திரையரங்க உரிமையாளர் ரேவந்த் விளக்கம்.. முழு வீடியோ இதோ..
சினிமா

துணிவு.. வாரிசு.. யார் REAL WINNER? - ரோகினி திரையரங்க உரிமையாளர் ரேவந்த் விளக்கம்.. முழு வீடியோ இதோ..

எதிர்பாராததை எதிர்பாருங்கள்.. பிக்பாஸ் 6 அட்டகாசமான அப்டேட் – உற்சாகத்தில் ரசிகர்கள்.. முழு விவரம் இதோ!
சினிமா

எதிர்பாராததை எதிர்பாருங்கள்.. பிக்பாஸ் 6 அட்டகாசமான அப்டேட் – உற்சாகத்தில் ரசிகர்கள்.. முழு விவரம் இதோ!

“பொன்னியின் செல்வனுக்கு முன்பே மணிரத்னம் படத்தில் நான் நடிக்க வேண்டியது..” –  சரத்குமார் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல்..
சினிமா

“பொன்னியின் செல்வனுக்கு முன்பே மணிரத்னம் படத்தில் நான் நடிக்க வேண்டியது..” – சரத்குமார் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல்..