‘கிருட்டு.. கிருட்டு.. இது புது vibe அ இருக்கே.. - வெளியானது கவினின் 'டாடா' பட பாடல்.. புரோமோ வீடியோ இதோ!

கவின் நடித்த டாடா படத்தின் கிருட்டு கிருட்டு பாடல் வெளியானது - kavin new movie dada song released | Galatta

பிக்பாஸ் தமிழ் தொலைகாட்சி மூலம் பிரபலமடைந்த கவின். தற்போது தமிழ் சினிமாவில் இளம் நடிகர்களில் ஒருவராக கவனிக்கப்பட்டு வருகிறார். முன்னதாக இவர் நடிப்பில் வெளிவந்த 'லிஃப்ட்' திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் பின்னர் கவின் வெள்ளித்திரையிலும் கவனம் பெறத் தொடங்கினார்.‌  மேலும் தொடர்ந்து ஆகாஷ் வாணி இணையதொடரிலும் நடித்தார். தற்போது கவின் ஊர் குருவி படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே கவின் நடித்து வெளிவரவிருக்கும் திரைப்படம் ‘டாடா’. அறிமுக இயக்குனர் கணேஷ் பாபுவுடன் இயக்கும் இப்படத்தயை ஒலிம்பியா மூவிஸ் தயாரித்துள்ளது. மேலும் இப்படத்தில் கவினுடன் இணைந்து பிரபல நடிகர் பாக்யராஜ், அபர்ணா தாஸ், ஹரிஷ், வி.டி.வி கணேஷ் மற்றும் பிரதீப் ஆண்டனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்,

குழந்தைக்கு தந்தையாக நடிக்கும் கவினின் டாடா படத்தின் டிரைலர் முன்னதாக வெளியாகி வரவேற்பை பெற்று எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இந்நிலையில் படத்தின் புதிய பாடலான ‘கிருட்டு கிருட்டு’ பாடலின்  புரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது படக்குழு. துள்ளலனா இசையுடன் காதல் வலியை பேசும் பாடலாக உருவாகியுள்ளது. ஜென் மார்டின் இசையில் மணி சந்திரா நடன வடிவமைப்பில் உருவாகியுள்ள பாடலை பாடலாசிரியர் விஷ்ணு எடாவன்  எழுதியுள்ளார். மற்றும் அந்தோனி தாசன் குரலில் துள்ளலான சிறப்பு படக்காட்சிகளும் கவின் மற்றும் அபர்ணா தாஸ் ஆட்டத்துடன் புரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது படக்குழு.

 

இதனையடுத்து பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து தற்போது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.  கவின் நடிப்பில் நகைச்சுவை கலந்த குடும்ப கதையாக உருவாகியுள்ள டாடா படத்தினை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயின்ட் மூவிஸ் வரும் 26 ம் தேதி திரையரங்குகளில் வெளியிடவுள்ளது.  கவினுக்கு பிக் பாஸ் நிகழ்சியிலிரிந்தே ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது. நிச்சயம் இந்த திரைப்படம் ஒரு நல்ல ஒப்பனிங்கை கவினுக்கு கொடுப்பது மட்டுமல்லாமல் நல்ல வசூலையும் கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை

காந்தாரவை கண்முன் காட்டிய ஊர் மக்கள் – நேரில் சென்று ஆசி பெற்ற படக்குழு.. இணையத்தில் வைரலாகும் வீடியோ.. இதோ..
சினிமா

காந்தாரவை கண்முன் காட்டிய ஊர் மக்கள் – நேரில் சென்று ஆசி பெற்ற படக்குழு.. இணையத்தில் வைரலாகும் வீடியோ.. இதோ..

போட்றா வெடிய.. சூர்யாவை இயக்கபோகும் பிரபல இயக்குனர் இவரா? - அட்டகாசமான அப்டேட்.. வைரலாகும் வீடியோ இதோ..
சினிமா

போட்றா வெடிய.. சூர்யாவை இயக்கபோகும் பிரபல இயக்குனர் இவரா? - அட்டகாசமான அப்டேட்.. வைரலாகும் வீடியோ இதோ..

வேகமெடுக்கும் விஜய் - லோகேஷ் கனகராஜ் அதிரடி கூட்டணியின் தளபதி67 பட ஷூட்டிங்! வெறித்தனமான அப்டேட்
சினிமா

வேகமெடுக்கும் விஜய் - லோகேஷ் கனகராஜ் அதிரடி கூட்டணியின் தளபதி67 பட ஷூட்டிங்! வெறித்தனமான அப்டேட்