இதுதான் தளபதி 67 ன் புதிய LOOK? - தளபதி விஜயின் MASS LOOK.. இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்..

லோகேஷ் கனகராஜின் தளபதி 67 திரைப்படத்திற்கு விஜயின் புதிய லுக் - Vijay Viral New look for thalapathy 67 | Galatta

வாரிசு பட வெற்றியை தொடர்ந்து விஜய் நடித்து வரும் திரைப்படம் ‘தளபதி 67’. இப்படத்தினை பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். ஏற்கனவே விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளிவந்த ‘மாஸ்டர் திரைப்படம் பெரிதும் பேசப்பட்டு வெற்றி படமாக அமைந்தது. இதையடுத்து இருவரும் சேரும் இந்த படம் மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பை உண்டாகியுள்ளது. மேலும் லோகேஷ் கனகராஜ் தற்போது தமிழ் சினிமாவில் அதிகம் கவனம் பெற்றுள்ள இளம் இயக்குனர். அவரது முந்தைய படமான ‘விக்ரம் திரைப்படம் மூலம் இந்திய அளவில் கவனம் பெற்றார். மேலும் விக்ரம் திரைப்படத்தின் மூலம் LCU என்ற பிரிவை உருவாக்கி அடுத்த சில ஆண்டுகளுக்கு அந்த பிரிவுகளின் கீழ் படம் எடுக்கவுள்ளதாக உறுதியளியத்தார் லோகேஷ். ஏற்கனவே  LCU பிரிவில் உலகநாயகன் கமல் ஹாசன், சூர்யா, கார்த்தி, பாஹத் பாசில் உள்ளிட்டோர் இருக்க தற்போது நடிகர் விஜயையும் தளபதி 67 மூலம்  LCU பிரிவில் களம் இறக்குகிறார். தற்போது  செவன் ஸ்கீரீன் தயாரிப்பில் அனிரூத் இசையமைக்கவுள்ள தளபதி 67 திரைப்படத்தில் விஜயுடன் இணைந்து தற்போது திரிஷா, சஞ்சய் தத், இயக்குனர் கௌதம் மேனன், இயக்குனர் மிஷ்கின் மற்றும் மன்சூர் அலிகான் இணைந்துள்ளனர். மேலும் இப்படத்தில் பல நட்சத்திரங்களை இணைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் விஜய் 50 வயது நபராக இப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் இணையத்தில் தற்போது வைரலானது.

இந்நிலையில் வாரிசு திரைப்படத்தின் வெற்றி கொண்டாட்டம் ஹைத்ராபாத்தில் சமீபத்தில் நடைபெற்றது. இதில் நடிகர் விஜய் உட்பட இயக்குனர் வம்சி, தயாரிப்பாளர் தில் ராஜு, பாடலாசிரியர் விவேக் மற்றும் நடிகர் ஷ்யாம் உள்ளிட்டோர் பங்குபெற்றனர். இதில் பங்குபெற்ற  விஜய் புதிய தோற்றத்தில் தாடியும் அதிகளவும் முடியும் கொண்டு வித்யாசமாக இருந்தார். இந்த புகைப்படம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.  

thalapathy vijay at celabrate varisu success with varisu crew membersதற்போது தளபதி 67 படப்பிடிப்பில் பிஸியாக இருக்கும் விஜய். இந்த தோற்றத்தில் வந்ததால் ஒருவேளை தளபதி 67 ல் அவரது கதாபாத்திரத்தின் தோற்றம் இதை ஒன்றியே இருக்குமா? என்று ரசிகர்கள் இணையத்தில் பதிவிட்டுள்ளனர். முன்னதாக நடிகையும் தொகுப்பாளினியுமான ரம்யா சுப்பிரமணியன் தான் எழுதிய ‘stop weighting’ என்ற புத்தகத்தின் பிரதியை விஜய் க்கு வழங்கினார் . அந்த புகைப்படம் அன்று வெளியாகி வைரலானது. அந்த புகைப்படத்திலும் விஜய் இதே தோற்றத்தில் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

thalapathy vijay at celabrate varisu success with varisu crew members

When I took ‘STOP WEIGHTING’ to meet ‘I AM WAITING’ !!!! 💃🏻😍🤩🥳🔥😉🙏🏻

On that note wishing you all a Super Duper Happy Pongalo Pongal !!!!♥️♥️♥️♥️#PongaloPongal #StopWeighting #Vaarisu #NewYear2023 pic.twitter.com/b8XJao8anb

— Ramya Subramanian (@actorramya) January 15, 2023

மேலும் ஏற்கனவே வெளியான தகவலின் படி விஜய்  50 வயது நபராக நடிக்கவுள்ளார் என்ற தகவலின் அடிப்படையில்  இது ஒன்றி போவதால் தளபதியின் நியூ லுக் தற்போது வைரலாகி வருகிறது. நாளுக்கு நாள் எதிர்பார்ப்பை அதிகரிக்கும் தளபதி 67 திரைப்படம் நிச்சயம் விஜய் திரைபயனத்தில் ஒரு மைல்கல்லாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

கேரளா.. காஷ்மீர்.. அடுத்து எங்கே.. - தளபதி 67 லேட்டஸ்ட் அப்டேட்டை பகிர்ந்த பிரபல தயாரிப்பாளர்.. வீடியோ உள்ளே..
சினிமா

கேரளா.. காஷ்மீர்.. அடுத்து எங்கே.. - தளபதி 67 லேட்டஸ்ட் அப்டேட்டை பகிர்ந்த பிரபல தயாரிப்பாளர்.. வீடியோ உள்ளே..

விரைவில் காந்தாரா இரண்டாம் பாகம்.. கதை இதுதான்! – உறுதிசெய்த படக்குழு .. உற்சாகத்தில் ரசிகர்கள்
சினிமா

விரைவில் காந்தாரா இரண்டாம் பாகம்.. கதை இதுதான்! – உறுதிசெய்த படக்குழு .. உற்சாகத்தில் ரசிகர்கள்

அஜித் ரசிகர் மரணம்.. CCTV footage எங்கே? – ரோகினி திரையரங்க உரிமையாளர் ரேவந்த் விளக்கம்.. முழு வீடியோ இதோ..
சினிமா

அஜித் ரசிகர் மரணம்.. CCTV footage எங்கே? – ரோகினி திரையரங்க உரிமையாளர் ரேவந்த் விளக்கம்.. முழு வீடியோ இதோ..