விரைவில் காந்தாரா இரண்டாம் பாகம்.. கதை இதுதான்! – உறுதிசெய்த படக்குழு .. உற்சாகத்தில் ரசிகர்கள்

காந்தாரா 2 பாகம் குறித்து தயாரிப்பாளர் தகவல் - Hombale films producer about kantara part two | Galatta

ஹோம்பாலே ப்லிம்ஸ் தயாரிப்பில் இயக்குனர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த திரைப்படம் 'காந்தாரா'. உலகளவில் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படமாக காந்தாரா இருந்தாலும் பல மடங்கு அளவு வசூலை குவித்தது குறிப்பிடத்தக்கது. ஹோம்பாளே ப்லிம்ஸ் தயாரிப்பில் உருவான காந்தாரா திரைப்படம் அனைத்து மொழிகளிலும் டப் செய்யப்பட்டு உலகெங்கிலும் இன்றும் பல இடங்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. வசூல் மட்டுமல்லாமல் பல விருது மேடைகள் ஏறி உலக மக்களை இந்திய சினிமா மீது கவனம் பெற செய்துள்ளது. மேலும் உலகின் உயர்ந்த விருதாக கருதக்கூடிய ஆஸ்கார் விருது 2023 பரிந்துரைப்பட்டியலில் சிறந்த நடிகர் மற்றும் சிறந்த படம் பட்டியலில் தேர்வு செய்யப்பட்டது காந்தாரா திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. 

நிலப்பிரபுத்துவத்திற்கு எதிராக போராடும் பழங்குடியினர் மற்றும் அவர்களின் குலதெய்வ வழிபாடு மையப்படுத்தி உருவான காந்தாரா திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தினை எடுக்கபோவதாக அப்படத்தின் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர், காந்தாரா திரைப்படத்தின் அடுத்த பாகத்திற்கான கதையை இயக்குனர் ரிஷப் ஷெட்டி எழுதி வருகிறார். இது முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இல்லாமல் முதல் பாகத்தின் முந்தைய காலத்தை கதையாக்கும் பிரீக்குவலாக உருவாகவுள்ளது. ரிஷப் ஷெட்டி இதற்காக கர்நாடக பகுதிகளில் உட்பட்ட கடலோர பகுதிகளில் ஆய்வு நடத்தி வருகிறார்.

மேலும், இந்த காந்தரா இரண்டாம் பாகத்தில் கிராம மக்களுக்கும் அரசனுக்கும் உள்ள பிரச்சனையை மையப்படுத்தியும் அரசனுக்கு உட்பட்ட நிலங்களையும் மக்களையும் காப்பாற்ற இயற்கையுடன் போராடும் ஒரு கதையாக அமையும். படம் பெரும்பாலும் மழைக்காலத்தில் நடக்கவுள்ளதால் மழைக்காலங்களில் படமாக்க வேண்டிய நிலையில் உள்ளோம். வரும் ஜூன் முதல் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. பான் இந்திய திரைப்படமாக அடுத்தாண்டு ஏப்ரல் அல்லது மே மதத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளோம். இப்படத்தின் பட்ஜெட் மட்டுமே அதிகரித்துள்ளது. ஆனால் கதை கூறும் முறை, ஒளிப்பதிவு என முதல் பாகத்த்தின் தரத்திலே இருக்கும். மேலும் படத்தில் நடிப்பவர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்”.  என்று குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து காந்தாரா திரைப்படத்தின் ரசிகர்கள் இதுகுறித்த அப்டேட்டை வைரலாக்கி வருகின்றனர்.

உலகமே தற்போது இந்திய சினிமா மீது திரும்பியுள்ளது. நாளுக்கு நாள் இந்திய சினிமாவின் தரம் கூடிக் கொண்டே வருகின்றது. 'ஜல்லிக்கட்டு', 'கே.ஜி.எப்', 'ஆர் ஆர் ஆர்' , 'பொன்னியின் செல்வன்', 'காந்தாரா' ஆகிய படங்களின் வருகை உலக மேடைகளை தற்போது அலங்கரித்து வருவது ஒரு வகையான ஆரோக்கிய நிலையை இந்தியாவிற்கு கொடுத்துள்ளது என திரை ரசிகர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

எதிர்பாராததை எதிர்பாருங்கள்.. பிக்பாஸ் 6 அட்டகாசமான அப்டேட் – உற்சாகத்தில் ரசிகர்கள்.. முழு விவரம் இதோ!
சினிமா

எதிர்பாராததை எதிர்பாருங்கள்.. பிக்பாஸ் 6 அட்டகாசமான அப்டேட் – உற்சாகத்தில் ரசிகர்கள்.. முழு விவரம் இதோ!

“பொன்னியின் செல்வனுக்கு முன்பே மணிரத்னம் படத்தில் நான் நடிக்க வேண்டியது..” –  சரத்குமார் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல்..
சினிமா

“பொன்னியின் செல்வனுக்கு முன்பே மணிரத்னம் படத்தில் நான் நடிக்க வேண்டியது..” – சரத்குமார் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல்..

“விஜய் சேதுபதி படங்களை நான் ரீமேக் செய்ய மாட்டேன்..” – ஃபர்ஸி கதாநாயகன் ஷாகித் கபூர் பதில்..
சினிமா

“விஜய் சேதுபதி படங்களை நான் ரீமேக் செய்ய மாட்டேன்..” – ஃபர்ஸி கதாநாயகன் ஷாகித் கபூர் பதில்..