“லிப்ட்” கொடுப்பது போல் 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 49 வயது போலீஸ் கான்ஸ்டபிள் அதிரடியாக போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ளார்.

வழக்கம் போல், உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் மேலும் இப்படியான ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

உத்தரப் பிரதேசம் மாநிலம் புலந்த்ஷாஹர் மாவட்டத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தில், அந்த பகுதியைச் சேர்ந்த 49 வயதான போலீஸ் கான்ஸ்டபிள், ஒருவர் பணியாற்றி வந்திருக்கிறார்.

இப்படியான சூழ்நிலையில் தான், கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த போலீஸ் கான்ஸ்டபிள், அங்குள்ள அலிகார் மாவட்டத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு தன்னுடைய இருசக்கர வாகனத்தில் சென்று உள்ளார். 

அப்போது, அந்த பகுதியில் அங்குள்ள ஒரு அரசுப் பள்ளியில் படிக்கும் 16 வயது சிறுமி ஒருவர், நடந்துச் சென்று உள்ளார். 

அப்போது, அந்த சிறுமியைப் பார்த்து சபலப்பட்ட அந்த போலீஸ் கான்ஸ்டபிள், தனது வண்டியை நிறுத்தி அந்த சிறுமியிடம் பேச்சு கொடுத்து உள்ளார்.

பின்னர், அந்த சிறுமியிடம், “நான் உன்னை உனது வீட்டிற்கு அழைத்து செல்கிறேன்” என்று கூறி, அந்த சிறுமியை தனது பைக்கில் ஏற்றிச் சென்று உள்ளார். 

அந்த சிறுமியை அழைத்துக்கொண்டு சிறிது தூரம் சென்றதும், ஆட்கள் நடமாட்டம் இல்லாத அங்குள்ள ஒரு ஒதுக்குபுறமான பகுதியில் வைத்து, அந்த சிறுமியை அந்த போலீஸ் கான்ஸ்டபிள் பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். 

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த 16 வயது சிறுமி, அந்த போலீஸ் கான்ஸ்டபளிடம் இருந்து எப்படியோ தப்பித்து ஓடி வந்து உள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த போலீஸ் கான்ஸ்டபிள், அந்த சிறுமியை கடுமையாக தாக்கி உள்ளார். இதில், அந்த சிறுமி காயமடைந்த நிலையில், அழுதுகொண்டே இருந்து உள்ளார்.

அப்படியான நேரத்தில், அந்த போலீஸ் கான்ஸ்டபிளிடம் இருந்து ஒரு வழியாக தப்பிய அந்த சிறுமி, அங்கிருந்து எங்கும் நிற்காமல் தனது வீட்டிற்கு ஓடி வந்து சேர்ந்து உள்ளார். 

தனது வீட்டிற்கு வந்து சேர்ந்ததும், தனது பெற்றோரிடம் தனக்கு பாலியல் கொடுமகளை கூறி கதறி அழுதிருக்கிறார். இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், சிறுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், சம்மந்தப்பட்ட அந்த போலீஸ் கான்ஸ்டபிளை கண்டுப்பிடித்து அதிரடியாக கைது செய்தனர். பின்னர், சிறுமியை பலாத்காரம் செ்யத அந்த போலீசாரிடம், சக போலீசார் தீவிரமாக வழக்குப் பதிவு செய்த வருகின்றனர்.

இந்த வழக்கு குறித்து அலிகார் போலீஸ் உயர் அதிகாரி கூறும்போது, “ஒரு 16 வயது சிறுமிக்கு லிப்ட் கொடுப்பதாக கூறி, அழைத்து சென்று அவரை பாலியல் பலாத்காரம் செய்த கான்ஸ்டபிள் தற்போது கைது செய்யப்பட்டு உள்ளார் என்றும், தற்போது பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறார்” என்றும், தெரிவித்தார்.

அத்துடன், “அந்த சிறுமி, பெண் குழந்தைகள் பாதுகாப்பு இல்லத்தில் தங்கவைக்கப்பட்டு இருக்கிறார் என்றும், உள்ளூர் மாஜிஸ்திரேட் முன்பு அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு உள்ளது” என்றும், அவர் குறிப்பிட்டார்.

குறிப்பாக, “அந்த போலீஸ் கான்ஸ்டபிள் மீது தற்போது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர் சஸ்பெண்டும் செய்யப்பட்டு உள்ளார் என்றும், இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது” என்றும், அவர் கூறினார். இச்சம்பவம், அந்த மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.