தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளராகவும் நடிகராகவும் திகழும் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தற்போது தமிழக சட்டமன்ற உறுப்பினராகவும் மிகச் சிறப்பாக பணியாற்றி மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். முன்னதாக உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள நெஞ்சுக்கு நீதி திரைப்படம் கடந்த மே 20-ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது.

தமிழ் சினிமாவில் பாடகர், பாடலாசிரியர், நடிகர் & இயக்குனர் என பன்முக தன்மை கொண்ட கலைஞராக வலம் வரும் இயக்குனர் அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள நெஞ்சுக்கு நீதி படத்தில் உதயநிதி ஸ்டாலின் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். பாலிவுட்டிசூப்பர் ஹிட்டான ஆர்ட்டிகல் 15 படத்தின் தமிழ் ரீமேக்காக நெஞ்சுக்கு நீதி உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

போனி கபூர் தயாரிப்பில் உருவாகியிருக்கும் நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தில் தான்யா ரவிச்சந்திரன், ஆரி அர்ஜுனன், சிவாங்கி, இளவரசு, மயில்சாமி, ரமேஷ் திலக், சாயாஜி ஷிண்டே ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவில், தீபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார். 

ரெட் ஜெயன்ட் மூவீஸ் வெளியிட்ட நெஞ்சுக்கு நீதி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பையும் பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது. முன்னதாக நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தை பார்வையிட்ட தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் படக்குழுவினரை வெகுவாக பாராட்டியுள்ளார். இந்நிலையில் தற்போது நெஞ்சுக்கு நீதி திரைப்படத்திலிருந்து புதிய Sneak Peek வீடியோ வெளியானது. நெஞ்சுக்கு நீதி படத்தின் புதிய Sneak Peek வீடியோ இதோ…