இந்திய சினிமாவின் சிறந்த இயக்குனர்களில் ஒருவராக திகழும் இயக்குனர் வெற்றிமாறன் அடுத்ததாக நடிகர் சூர்யாவுடன் வாடிவாசல் படத்தில் இணைகிறார். ஜல்லிக்கட்டை மையப்படுத்தி உருவாகும் வாடிவாசல் திரைப்படத்தின் டெஸ்ட் ஷூட் சமீபத்தில் சென்னையிலுள்ள ஈசிஆரில் பிரத்யேக செட் அமைக்கப்பட்டு நடைபெற்றது.

விரைவில் வாடிவாசல் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் தற்போது இயக்குனர் வெற்றிமாறன் விடுதலை திரைப்படத்தை இயக்கி வருகிறார். மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் நடிகர் சூரி முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் விடுதலை திரைப்படத்தில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ்ராஜ், பவானி ஸ்ரீ மற்றும் சேத்தன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

ஆர்எஸ் இன்போடெயின்மென்ட் சார்பில் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தயாரிப்பில் உருவாகும் விடுதலை திரைப்படத்திற்கு ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் சிறுகதையை தழுவி விடுதலை திரைப்படம் தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.

தற்போது விடுதலை திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில்,  நடிகர் விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் விடுதலை படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெறுவதாக குறிப்பிட்டு, விடுதலை திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து புதிய ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார். சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த புகைப்படங்கள் இதோ…