பாலியல் உறவால் புதிய நோய் பரவி வருவதாக அதிர்ச்சி தரும் விசயங்கள் வெளியாகி பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நோய் பற்றிய உறுதி செய்யும் 5 விசயங்கள் பற்றி தற்போது பார்க்கலாம்.

கொரோனா பாதிக்கப்பட்ட ஆண்களுக்கு ஆண்மைக் குறைவு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுவதாகவும், இதனால் தம்பதிகள் பலரும் மருத்துவமனைக்கு சென்ற வண்ணம் உள்ளதாகவும் அதிர்ச்சி அளிக்கும் தகவல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அத்துடன், “கொரோனா வைரஸ் தொற்று பீதியால், தம்பதிகள் உடலுறவில் ஈடுபடலாமா?” என்ற சந்தேகமும், அச்சமும் எல்லோரிடத்திலும் அப்போது எழுந்தது.

அதே போல், உலகம் முழுவதும் கொரோனா என்னும் பெருந் தொற்று பரவத் தொடங்கிய நேரத்தில், “பாலியல் இன்பத்தில் நேர்மறையான, மரியாதைக்குரிய அணுகுமுறை தேவை” என்று, உலக சுகாதார அமைப்பு வேண்டுகோள் விடுத்தது.

அத்துடன், “கொரோனா காலத்தில், தம்பதிகள் முன்னெச்சரிக்கையாக இருக்கும் வகையில் பாதுகாப்பான முறையில், தங்களது துணையுடன் இணைய வேண்டும்” என்று, வெளிநாட்டு மருத்துவர்கள் புதிய புதிய அறிவிப்புகளை அடுத்தடுத்து வெளியிட்டுனர். 

இந்த நிலையில் தான், “பாலியல் உறவால் புதிய நோய் பரவி வருவதாக” அதிர்ச்சி தரும் விசயங்கள் தற்போது வெளியாகி, பெரும் பீதியை கிளப்பி உள்ளன.

அதாவது, இந்த மே மாத தொடங்கிய தருணத்தில், வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் 10 க்கும் மேற்பட்டோருக்கு “மன்ங்கி பாக்ஸ் வைரஸ்” தொற்று பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

குறிப்பாக, “பாலியல் உறவால் இந்த வைரஸ் அதிகம் பரவ வாய்ப்பு இருப்பதாக” அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறி, அதிர்ச்சிக்கரமான செய்தியை வெளியிட்டு உள்ளனர்.

அத்துடன், ஸ்பெயின் மற்றும் போர்ச்சுக்கல் நாட்டில் 40 க்கும் அதிகமானோருக்கு இந்த “மன்ங்கிபாக்ஸ் வைரஸ்” தொற்று, உறுதி செய்யப்பட்டதை அடுத்து, கனடாவிலும் 12 க்கும் அதிகமானோருக்கு இந்த தொற்று பாதிப்பு தற்போது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. 

முக்கியமாக, இந்த வைரஸ் தொற்றானது, இங்கிலாந்திலும் மே 6 ஆம் தேதியில் இருந்து இது வரை 9 பேருக்கு இந்த “மன்ங்கிபாக்ஸ் வைரஸ்” தொற்று, உறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

அதே போல், அமெரிக்காவிலும் இந்த “மன்ங்கிபாக்ஸ் வைரஸ்” தொற்று, நேற்று முன் தினம் ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

குறிப்பாக, இந்த “மன்ங்கிபாக்ஸ் வைரஸ்” தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில், பெரும்பாலானோருக்கு பாலியல் உறவால் தான் இந்த தொற்று நோய் பரவியிருப்பதாக, அமெரிக்க நோய் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை மையம் கூறி இருக்கிறது.

அதே போல், “ஆணுடன் - ஆண் பாலியல் உறவு கொள்பவர்களிடையே இந்த “மன்ங்கிபாக்ஸ் வைரஸ்” தொற்று அதிகம் பரவியிருப்பதை” இங்கிலாந்து சுகாதாரத்துறையும், தற்போது உறுதி செய்திருக்கிறது.

இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய சுகாதாரத்துறை அதிகாரிகளின் ஆய்வின் படி, “தன்பாலின சேர்க்கையில் ஈடுபடுபவர்களுக்கும், இருபாலின சேர்க்கை பழக்கம் உடையவர்களுக்கும் இடையே இந்த “மன்ங்கிபாக்ஸ் வைரஸ்” தொற்று அதிகம் பரவியிருப்பதாக, உலக சுகாதார நிறுவனமும் இந்த வார துவக்கத்தில் கூறி உள்ளது.

இது குறித்து WHO உதவி இயக்குநர் ஜெனரல் டாக்டர் சோஸ் ஃபால், கூறும்போது “ஆணுடன் - ஆண் பாலியல் உடலுறவு கொள்பவர்களிடையே இந்த “மன்ங்கிபாக்ஸ் வைரஸ்” தொற்று, அதிகம் பரவியிருப்பதை காணமுடிகிறது” என்று, கூறியுள்ளார்.

மேலும், “மத்திய மற்றும் மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் கடந்த சில ஆண்டுகளில் “மன்ங்கிபாக்ஸ் வைரஸ்” தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும், அடுத்த சில வாரங்களில் குணமடைந்து உள்ளனர் என்றும், அதில் ஒரு சிலரே அரிதாக உயிரிழந்தனர்” என்றும், அவர் கூறியுள்ளார்.

முக்கியமாக, “ஐரோப்பிய மற்றும் வட ஆப்ரிக்காவில் இது இன்னும் அரிதாகவே பரவுகிறது” என்றும், அவர் தெரிவித்து உள்ளார்.

மன்ங்கிபாக்ஸ் வைரஸ் - 5 அறிகுறிகள்

மிக முக்கியமாக, “இந்த மன்ங்கிபாக்ஸ் வைரஸ் தொற்று முதலில் காய்ச்சல், தசை வலி மற்றும் கணுக்கால் வீக்கம் என ஆரம்பித்து, அதன் பிறகே முகம் மற்றும் உடலில் சிக்கன் பாக்ஸ் போன்று தடிப்புகளை ஏற்படுத்தும் அறிகுறிகளாக மாறுகிறது” என்றும், அவர் விளக்கம் அளித்து உள்ளார்.