'மாமன்னன்' படத்தில் வடிவேலு இணைந்தது இப்படிதான்..! உதயநிதி ஸ்டாலின் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல்கள்.. - Exclusive interview உள்ளே..

மாமன்னன் படத்தில் வடிவேலு நடிக்க காரணம் உதயநிதி பகிர்ந்த தகவல் உள்ளே - Udhayanidhi stalin about vadivelu role maamannan movie | Galatta

தமிழ் திரையுலகில் தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்படும் திரைப்படமாக இருந்து வருவது இயக்குனர் மாரி செல்வராஜின் ‘மாமன்னன்’ உதயநிதி ஸ்டாலின், வைகை புயல் வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் மிக முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து உருவாகியிருக்கும் இப்படத்தின் அறிவிப்பிலிருந்தே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அதன்படி முன்னதாக வெளியான படத்தின் டிரைலர் மற்றும் ஏ ஆர் ரஹ்மான் இசையில் வெளியான பாடல்கள் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று கவனம் பெற்றது.

இந்நிலையில் நமது கலாட்டா தமிழ் சிறப்பு பேட்டியில் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டு வரும் ஜூன் 29ம் தேதி வெளியாகவிருக்கும் மாமன்னன் படம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில் வடிவேலு அவர்கள் எப்படி மாமன்னன் படத்தில் இடம் பெற்றார் என்ற அனுபவம் குறித்து அவர் பேசுகையில்,

“கதை சொன்னதும் அப்பா கதாபாத்திரத்திற்கு வடிவேலு வேண்டும் என்று கேட்டார். வடிவேலுவை இவ்வளவு சீரியஸா யாரும் நினைச்சு பாத்திருக்க மாட்டாங்க.. அந்த நேரத்துல தான் வடிவேலு அண்ணா ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’, ‘சந்திரமுகி 2’ லாம் நடிச்சுட்டு இருந்தார். காமெடி படங்கள் பண்ணிட்டு இருந்தார். அப்போ நான் வடிவேலு அண்ணாக்கு போன் ‌பண்ணி அண்ணா ‘கர்ணன்’ , ‘பரியேரும் பெருமாள்’ படமெல்லாம் பாத்துருக்கீங்களா? னு கேட்டேன் .. அவர் இல்லன்டார்.

அப்பறம் அவரை பார்க்க சொன்னேன்.  கதை சொல்ல இயக்குனர் வருவாருனு சொன்னேன்.‌அதோடு இது என் கடைசி‌ படம். அதுல நீங்க நடிச்சா நல்லாருக்கும்னு நினைக்குறேன்னு சொன்னேன். அதுக்கு முன்னாடி பரியேரும் பெருமாள், கர்ணன் படங்களெல்லாம் பாத்துடுங்க என்றேன் அவர் அப்பறம் மாரி செல்வராஜிடம் கதை கேட்ட பின் எனக்கு கால் பண்ணி பேசுனாரு.. "நீங்க கதை கேட்டிங்களா.. இந்த அப்பா கதாபாத்திரம் தான் என்னை நடிக்க கேட்டீங்களா" என்றார்.. நானும் ‘ஆமா நீங்க பண்ணா நல்லாருக்கும்னு சொன்னேன்.’

அவர் உங்களுக்கு ஓகே னா.. எனக்கு ஓகே னு சொன்னேன்..வடிவேலு ஓகே சொன்னதும் மாரி செல்வராஜ் ஃபகத் பாசில் வேண்டும்னு கேட்கிறார். வடிவேலு நிகரா ஒரு வலிமையான நடிகன்‌ வேண்டும் னு கேட்டார். ஃபகத் பாசில் கிட்ட பேசும்போது "மாரி செல்வராஜ் கூட படம் பண்ணனும் நான் ரொம்ப நாளா வெயிட் பண்ணிட்டு இருக்கேன்" என்றார். சரி கதை கேளுங்கள் என்றேன். அவர் மாரி செல்வராஜ் தானே அப்பறம் என்னென்னு கதை கேட்காம விட்டார்.” என்றார் உதயநிதி ஸ்டாலின்.

மேலும் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வெளியாகவிருக்கும் மாமன்னன் படம் குறித்து சுவாரஸ்யமான பல தகவல்களை பகிர்ந்து கொண்ட முழு வீடியோ உள்ளே..

 

ஏ.ஆர் ரஹ்மான் முதல் மணிரத்னம் வரை நடிகை ஷாமிலிக்கு குவியும் பாராட்டுகள்.! - ரசிகர்கள் வைரலாக்கும் புகைப்படங்கள் உள்ளே..
சினிமா

ஏ.ஆர் ரஹ்மான் முதல் மணிரத்னம் வரை நடிகை ஷாமிலிக்கு குவியும் பாராட்டுகள்.! - ரசிகர்கள் வைரலாக்கும் புகைப்படங்கள் உள்ளே..

“ரஜினி சார் ரிஷி மாதிரி அமைதியா இருப்பார்” ஜெயிலர் படபிடிப்பு அனுவம் குறித்து நடிகர் வசந்த் ரவி.. – Exclusive Interview இதோ..
சினிமா

“ரஜினி சார் ரிஷி மாதிரி அமைதியா இருப்பார்” ஜெயிலர் படபிடிப்பு அனுவம் குறித்து நடிகர் வசந்த் ரவி.. – Exclusive Interview இதோ..

“மாரி செல்வராஜ் செட் இப்படி தான் இருக்கும்..” உண்மையை உடைத்த கீர்த்தி சுரேஷ் – Exclusive Interview உள்ளே..
சினிமா

“மாரி செல்வராஜ் செட் இப்படி தான் இருக்கும்..” உண்மையை உடைத்த கீர்த்தி சுரேஷ் – Exclusive Interview உள்ளே..