ஒரே நாளில் குடும்பத்தில் அடுத்தடுத்த இழப்பு.. உடைந்த பிரபல நடிகர் போஸ் வெங்கட்..!

ஒரே நாளில் போஸ் வெங்கட் குடும்பத்தில் ஏற்பட்ட இரண்டு இழப்புகள் விவரம் உள்ளே - Actor Bose venkat lost his sibling in a single day | Galatta

நடிகர் போஸ் வெங்கட்டின் அக்காவும், அண்ணனும் மாரடைப்பால் ஒரே நாளில் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே பரிச்சியமான நடிகராக பல காலங்களாக இருந்து வருபவர் நடிகர் போஸ் வெங்கட். கடந்த 2003 ஈர நிலம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நடிகராக அறிமுகமானவர் பின் தொடர்ந்து பல முக்கிய படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிகர் போஸ் வெங்கட் நடித்து வந்தார். இவரது திரைப்பயணத்தில் சுந்தர் சி  நடிப்பில் வெளியான தலைநகரம் படம் திருப்புமுனையாக அமைந்தது. இப்படத்திற்கு பின் போஸ் வெங்கட்டிற்கு நிறைய முன்னணி நட்சத்திரங்களின் படங்களிலும் வாய்புகள் குவிந்தது, அதன்படி, ‘சிவாஜி’, ‘கோ’, ‘சிங்கம்’, ‘கவண்’ ஆகி படங்கள் ரசிகர்களிடையே அதிகம் பேசப்பட்டது.  தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் போஸ் வெங்கட் சில படங்களில் நடித்துள்ளார். நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனராகவும் தமிழ் சினிமாவில் ‘கன்னி மாடம்’ படத்தின் மூலம் அறிமுகமானார். அதை தொடர்ந்து தற்போது போஸ் வெங்கட் ‘மாபொசி’ என்ற படத்தையும் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் திரைத்துறையை தாண்டி மக்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டது சின்னத்திரையின் மூலம் தான். கடந்த 2002 முதல் 2005 வரை சன் டிவியில் ஒளிப்பரப்பான மெட்டி ஒலி சீரியலில் போஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் வெங்கட் மிகப்பெரிய அளவு பிரபலமடைந்தார். இந்த சீரியலுக்கு பின்பு தான் வெங்கட் என்ற பெயர் ரசிகர்களிடையே போஸ் வெங்கட் என்று மாறியது என்பது குறிப்பிடத்தக்கது. மெட்டி ஒலி தொடரை தொடர்ந்து போஸ் வெங்கட் பல சீரியலில் நடித்து வந்தார். மேலும் இவர் திரைப்படங்களுக்கு பின்னணி குரல் கலைஞராகவும் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது திரைத்துறையில் பிஸியாக வலம் வரும் போஸ் வெங்கட்டிற்கு அதிர்ச்சி தரும் வகையில் அவரது சகோதரி இறந்துள்ளார். சென்னை எம்எம்கே பகுதியில் வசித்து வரும் நடிகர் போஸ் வெங்கட்டின் மூத்த சகோதரி வளர்மதி மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். இவரது இறுதி சடங்கு அப்பகுதியில் உறவினர் சூழ நடைபெற்றது. இந்த சடங்கில் கலந்து கொள்ள வந்த போஸ் வெங்கட்டின் அண்ணன் ரங்கநாதன் துக்கம் தாளாமல் கதறி அழுதுள்ளார். அப்போது திடீரென அவருக்கு மாரடைப்பு எபட்டு அங்கேயே அவரும் இறந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அடுத்தடுத்த இழப்புகள் போஸ் வெங்கட் மிகப்பெரிய பாதிப்பை கொடுத்துள்ளது.

இந்த செய்தி இணையத்தில் செய்திகளின் வாயிலாக விரலாக ரசிகர்கள் வேதனையடைந்து நடிகர் போஸ் வெங்கட்டிற்கு தங்களது அனுதாபங்களை தெரிவித்து வருகின்றனர்.

துல்கர் சல்மானின் Pan India திரைப்படம்.. ‘கிங் ஆஃப் கோதா’ டீசர் அப்டேட்டினை வெளியிட்ட படக்குழு.. வீடியோ வைரல்..!
சினிமா

துல்கர் சல்மானின் Pan India திரைப்படம்.. ‘கிங் ஆஃப் கோதா’ டீசர் அப்டேட்டினை வெளியிட்ட படக்குழு.. வீடியோ வைரல்..!

 “இது ஒரு சீரியஸான விஷயம்...” இளைஞர்களுக்கு நடிகர் கார்த்தி அறிவுரை..!
சினிமா

“இது ஒரு சீரியஸான விஷயம்...” இளைஞர்களுக்கு நடிகர் கார்த்தி அறிவுரை..!

ஏ.ஆர் ரஹ்மான் முதல் மணிரத்னம் வரை நடிகை ஷாமிலிக்கு குவியும் பாராட்டுகள்.! - ரசிகர்கள் வைரலாக்கும் புகைப்படங்கள் உள்ளே..
சினிமா

ஏ.ஆர் ரஹ்மான் முதல் மணிரத்னம் வரை நடிகை ஷாமிலிக்கு குவியும் பாராட்டுகள்.! - ரசிகர்கள் வைரலாக்கும் புகைப்படங்கள் உள்ளே..