நடிகை குஷ்பு மருத்துவமனையில் திடீர் அனுமதி.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

நடிகை குஷ்பு மருத்துவமனையில் அனுமதி விவரம் உள்ளே - Actress kushboo admitted in hospital | Galatta

தென்னிந்தியாவின் பிரபல நடிகையும் திரைத்துறையில் மிக முக்கியமான பிரபலமும் ஆன குஷ்பூ தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். 90 காலக் கட்டத்தில் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகைகளில் மிக முக்கியமானவர் நடிகை குஷ்பூ. துரு துருவான நடிப்பின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை குஷ்பூ.தென்னிந்திய திரையுலகில் கமல் ஹாசன், ரஜினிகாந்த், சரத் குமார், விஜய் காந்த், பிரபு போன்ற முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர். திரைத்துறை மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் பல நிகழ்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். மேலும் சீரியல்கள் மற்றும் திரைப்படங்களை தயாரித்தும் உள்ளார் நடிகை குஷ்பு. திரைத்துறையில் பன்முக திறன் வாய்ந்த குஷ்பூ அரசியல் களத்திலும் நீண்ட காலமாக இயங்கி வருகிறார்.

தற்போது நடிகை குஷ்பூ பாரதிய ஜனதா கட்சியில் முழு நேர அரசியல்வாதியாக இருந்து வருகிறார். மேலும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராகவும் இருந்து வருகிறார். இவர் இறுதியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கிய ‘அண்ணாத்த’ படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். பின்னர் சில படங்களில் குஷ்பூ நடித்து வந்தார். அதன்பின்னர் திரைப்படங்களில் குஷ்பூ பெரிதும் நடிக்காமல் தற்போது பிஸியான அரசியல்வாதியாக செயல்பட்டு வருகிறார்.

udhayanidhi stalin about vadivelu and fahadh faasil roles maamannan movie

இந்நிலையில் நடிகை குஷ்பூ தனது சமூக வலைதள பக்கத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். ரசிகர்கள் புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர் புகைப்படத்துடன் நடிகை குஷ்பூ அதனுடன் இடுப்பு எலும்பு பிரச்சனையால் சிகிச்சை பெற்று வருகிறேன்.. விரைவில் இதிலிருந்து மீண்டு வருவேன் என்று நம்புகிறேன். என்று குறிப்பிட்டுள்ளார் நடிகை குஷ்பூ. இதையடுத்து நடிகை குஷ்பூ பூரண குணமடைய ரசிகர்கள் பிரத்தானை செய்து வருகின்றன. மேலும் குஷ்பூவின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

On the road to recovery! Underwent a procedure for my coccyx bone ( tail bone ) yet again. Hope it heals completely. 🙏 pic.twitter.com/07GlQxobOI

— KhushbuSundar (@khushsundar) June 23, 2023

 “இது ஒரு சீரியஸான விஷயம்...” இளைஞர்களுக்கு நடிகர் கார்த்தி அறிவுரை..!
சினிமா

“இது ஒரு சீரியஸான விஷயம்...” இளைஞர்களுக்கு நடிகர் கார்த்தி அறிவுரை..!

ஏ.ஆர் ரஹ்மான் முதல் மணிரத்னம் வரை நடிகை ஷாமிலிக்கு குவியும் பாராட்டுகள்.! - ரசிகர்கள் வைரலாக்கும் புகைப்படங்கள் உள்ளே..
சினிமா

ஏ.ஆர் ரஹ்மான் முதல் மணிரத்னம் வரை நடிகை ஷாமிலிக்கு குவியும் பாராட்டுகள்.! - ரசிகர்கள் வைரலாக்கும் புகைப்படங்கள் உள்ளே..

“ரஜினி சார் ரிஷி மாதிரி அமைதியா இருப்பார்” ஜெயிலர் படபிடிப்பு அனுவம் குறித்து நடிகர் வசந்த் ரவி.. – Exclusive Interview இதோ..
சினிமா

“ரஜினி சார் ரிஷி மாதிரி அமைதியா இருப்பார்” ஜெயிலர் படபிடிப்பு அனுவம் குறித்து நடிகர் வசந்த் ரவி.. – Exclusive Interview இதோ..