"ரசிகருக்கு பிடிக்காதுனு GVM கிட்ட சொன்னேன்.." பச்சைக்கிளி முத்துச்சரம் படம் குறித்து நடிகர் சரத்குமார்..- முழு நேர்காணல் இதோ..

பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்படம் குறித்து நடிகர் சரத்குமார் பகிர்ந்த தகவல் – sarathkumar on pachaikili muthucharam failure | Galatta

தென்னிந்தியாவின்  முன்னணி இயக்குனர்களில் முகியமனவராய் இருந்து வருபவர் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன். மின்னலே திரைப்படத்தின் மூலம் தொடங்கிய இவரது திரைப்பயணம் இன்று வரை பல ஹிட் திரைப்படங்களை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார். அதன்படி விண்ணை தாண்டி வருவாயா, வேட்டையாடு விளையாடு, காக்க காக்க, வாரணம் ஆயிரம், என்னை அறிந்தால், வெந்து தணிந்தது காடு போன்ற பல படங்களை கொண்டாடி வருகின்றனர். அதே நேரத்தில் பல ஹிட் திரைப்படங்களுக்கு மத்தியில் கௌதம் மேனன் முயற்சி செய்த திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்படாமல் போய் தோல்வியையும் அடைந்துள்ளது. அதன்படி அவர் இயக்கிய பச்சைக்கிளி முத்துச்சரம், நடுநிசி நாய்கள் போன்ற படங்கள் உள்ளது.

இதில் பச்சைக்கிளி முத்துச்சரம் படம் குறித்து அப்படத்தின் நாயகன் நடிகர் சரத் குமார் அவர்கள் நமது கலாட்டா பிளஸ் சிறப்பு பேட்டியில் பகிர்ந்தவை, “பச்சைக்கிளி முத்துச்சரம் படம் பண்ணும் போது கௌதமிடம் சொன்னேன். இந்த காட்சியில் மிலிந்த் சோமன் என்னை அடிப்பது ரசிகர்கள் அதை ஏற்றுகொள்ள மாட்டாங்க.. இப்ப வரைக்கும் எனக்கு தனி பில்டப் காட்சி இருந்துட்டு தான் இருக்கு.. அதை உடைக்குறது ரொம்ப கஷ்டம். அந்த ரசிகர் பட்டாளம் இருந்துட்டு தான் இருக்கும்.‌ அப்படி இருக்கையில் அந்த காட்சியில் அவன் என்னை அடிப்பது ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்..

நான் அப்போதே B & C ரசிகருக்கு இது பிடிக்காது என்று சொன்னேன் அதே போல் நடந்தது.  A Center ல படம் நல்லா இருந்தது. நல்ல வரவேற்பும் கிடைத்தது. அங்க ஏன் வேலை செய்யலனு முன்னாடியே சொல்லிருக்கேன். இந்த மாதிரி கருத்துக்கள் சொல்வேன். அதே மாதிரி ருத்ரன். அந்த படம் 4 வருஷம் முன்னாடி எடுத்த படம். அதிலும் சில காட்சிகள் மாற்றியமைக்கும் படி பரிந்துரை செய்தேன். பின் மாத கணக்கில் அதை யோசித்து கொஞ்சம் கொஞ்சம் மாத்தி பண்ணாங்க.. லாரன்ஸிடம் என்னிடம் தனி மரியாதை உள்ளது. இப்போ வரைக்கும் என்னை காஞ்சனா படம் வைத்து குழந்தைகள் அடையாளம் காணுகிறார்கள்..” என்றார் நடிகர் சரத்குமார்

கடந்த 2007 ம் ஆண்டு சரத் குமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வெளியான திரைப்படம் ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ கௌதம் மேனன் தமிழில் இயக்கும் நான்காவது திரைப்படம். இப்படத்தில் சரத்குமாருடன் இணைந்து ஜோதிகா, ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடித்திருப்பார். முதல் மூன்று படங்களின் மிகப்பெரிய ஹிட்டிற்கு பிறகு வந்த திரைப்படம் என்பதால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் தனி எதிர்பார்ப்பு இருந்து வந்தது. B & C ரசிகர்கள் கொண்டாடி பார்க்குமளவு திரைப்படம் இல்லாமல் போக படம் A Center பார்வையாளர்களால் மட்டுமே வரவேற்பை பெற்று தோல்வியடைந்து. எதிர்பார்ப்பில் வெளியாகி தோல்வியடைந்த படம் என்றாலும் இன்றும் ரசிகர்களால் ரசிக்கும் படமாகவே பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்படம் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் நடிகர் சரத்குமார் அவர்கள் அவரது திரைப்பயணம் குறித்து பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான தகவல் கொண்ட முழு வீடியோ இதோ..

 

 

உதயநிதி ஸ்டாலின் - மாரி செல்வராஜின் மாமன்னன்... ARரஹ்மானின் அதிரடியான இசை விருந்தாக வரும் 2வது பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு இதோ!
சினிமா

உதயநிதி ஸ்டாலின் - மாரி செல்வராஜின் மாமன்னன்... ARரஹ்மானின் அதிரடியான இசை விருந்தாக வரும் 2வது பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு இதோ!

60 வயதில் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட பிரபல நடிகர்.. குவியும் வாழ்த்துகள்..  – வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே..
சினிமா

60 வயதில் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட பிரபல நடிகர்.. குவியும் வாழ்த்துகள்.. – வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே..

சம்யுக்தா மீது போலீஸ் புகார் இருக்கா? உண்மையை உடைத்த சம்யுக்தா அம்மா.. முழு வீடியோ உள்ளே.
சினிமா

சம்யுக்தா மீது போலீஸ் புகார் இருக்கா? உண்மையை உடைத்த சம்யுக்தா அம்மா.. முழு வீடியோ உள்ளே.