ஜீவி பிரகாஷ் குமார் - கௌரி கிஷனின் புதிய பட முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு... ட்ரெண்டாகும் ரொமான்டிக்கான GLIMPSE இதோ!

ஜீவி பிரகாஷின் அடியே பட முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு,gv prakash kumar in adiye movie first single release announcement | Galatta

இசையமைப்பாளராகவும் நடிகராகவும் தனக்கென தனி பாணியில் மிகச்சரியாக பயணம் செய்து வரும் ஜீவி பிரகாஷ் குமார் கதாநாயகனாக அடுத்து நடிக்கும் அடியே திரைப்படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டது. முன்னதாக இந்த 2023ம் ஆண்டில் தனுஷின் கேப்டன் மில்லர், விஷாலின் மார்க் ஆண்டனி, இயக்குனர் பா.ரஞ்சித் - சீயான் விக்ரம் கூட்டணியில் உருவாகும் தங்கலான், இயக்குனர் வெற்றிமாறன் - சூர்யா கூட்டணியில் உருவாக இருக்கும் வாடிவாசல், கார்த்தியின் ஜப்பான், வசந்த பாலனின் அநீதி, உலக நாயகன் கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் SK21, அருண் விஜயின் மிஷன் சாப்டர் 1 - அச்சம் என்பது இல்லையே மற்றும் சூரரைப் போற்று ஹிந்தி ரீமேக் ஆகிய திரைப்படங்கள் ஜீவி பிரகாஷ்குமார் இசையில் தயாராகி வருகின்றன. அதே போல்  நடிகராகவும் தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் ஜீவி பிரகாஷ் குமார் நடிப்பில் அடுத்தடுத்து இடிமுழக்கம், 13, கள்வன், டியர், ரெபல் ஆகிய திரைப்படங்கள் வெளிவர தயாராகி வருகின்றன. 

இந்த வரிசையில் அடுத்ததாக ஜீவி பிரகாஷ் குமார் நடிக்கும் புதிய திரைப்படம் தான் அடியே.  கடந்த சில வாரங்களுக்கு முன்பு அட்றாசிட்டிகள் நிறைந்த மோஷன் போஸ்டராக வெளிவந்த அடியே படத்தின் மோஷன் போஸ்டர் பெரும் கவனத்தைப் பெற்றது. ஏனென்றால் மோஷன் போஸ்டரின் ஆரம்பத்தில் செல்போன் மாதிரியான ஒரு பொருள் காட்டப்படுகிறது. அதில் பயனாளர் மல்டிவெர்சில் பயணம் செய்ய தயார் என காட்டுகிறது. பின் நாம் தமிழர் கட்சியின் சீமான் இலங்கை பிரதமர் சீமான் என்றும் , தளபதி விஜய் - இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிக்காமல் கைவிடப்பட்ட யோஹன் அத்தியாயம் ஒன்று திரைப்படத்தின் 150 வது நாள் என்றும், ஃபார்முலா 1 பந்தயத்தில் 5 முறை சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற அஜித்குமார் என்றும்,  நடிகர் சங்க கட்டிடத்தை விஷால் தலைமையில் ராதாரவி திறந்து வைக்கிறார் என்றும் போஸ்டர் காட்டப்படுகிறது. மேலும் 7 முறை ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்ற RCB அணிக்கும் CSK அணிக்கும் போட்டி என குறிப்பிட்டுள்ள ஒரு டிஜிட்டல் ஸ்கிரீனில் தோனி RCB அணிக்கு கேப்டனாக விளையாடுவது போலவும் CSK அணிக்கு கேப்டனாக தல கேதார் ஜாதவ் என்றும் காட்டப்படுகிறது. மேலும் சூப்பர் ஸ்டார் மன்சூர் அலிகான் நடிக்கும் பேரரசுவின் 3.0 என்றும் இந்திய பிரதமர் கேப்டன் விஜயகாந்த்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று பறக்கும் பாராஷூட்களும் ட்ரெண்டானது.

முன்னதாக ஏண்டா தலையில எண்ண வைக்கல மற்றும் திட்டம் இரண்டு ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் கார்த்திக் விக்னேஷ் இயக்கத்தில் உருவாகும் அடியே திரைப்படத்தில் ஜீவி பிரகாஷ் குமார் உடன் இணைந்து இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் நடிகை கௌரி கிஷன் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க மதும்கேஷ், மிர்ச்சி விஜய் உள்ளிட்டோர் முக்கிய இடங்களில் நடிக்கின்றனர். மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த அடியே திரைப்படத்திற்கு கோகுல் பினாய் ஒளிப்பதிவில், முத்தய்யன் படத்தொகுப்பு செய்ய, ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.  இந்நிலையில் அடியே திரைப்படத்தின் முதல் பாடலான "வா செந்தாழினி" எனும் பாடல் வருகிற மே 26 ஆம் தேதி ரிலீசாகும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அறிவிக்கும் வகையில் அடியே படத்தில் இருந்து "வா செந்தாழினி" பாடலின் ரொமான்டிக்கான ப்ரோமோ வீடியோவை படக் குழுவினர் வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோ இதோ…
 

லோகேஷ் கனகராஜின் மாநகரம் ஹிந்தி ரீமேக்... முனிஷ்காந்த் கேரக்டரில் கலக்கும் விஜய் சேதுபதி! விறுவிறுப்பான டீசர் இதோ
சினிமா

லோகேஷ் கனகராஜின் மாநகரம் ஹிந்தி ரீமேக்... முனிஷ்காந்த் கேரக்டரில் கலக்கும் விஜய் சேதுபதி! விறுவிறுப்பான டீசர் இதோ

மம்மூட்டி - ஜோதிகா இணைந்து நடித்த முதல் படம்... ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த அசத்தலான GLIMPSE இதோ!
சினிமா

மம்மூட்டி - ஜோதிகா இணைந்து நடித்த முதல் படம்... ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த அசத்தலான GLIMPSE இதோ!

'விஜய்’ செல்லம் என்ன வந்து கொஞ்சிருச்சு!- லியோ பட அனுபவத்தை பகிர்ந்த மிஷ்கின்... வைரலாகும் அட்டகாசமான வீடியோ இதோ!
சினிமா

'விஜய்’ செல்லம் என்ன வந்து கொஞ்சிருச்சு!- லியோ பட அனுபவத்தை பகிர்ந்த மிஷ்கின்... வைரலாகும் அட்டகாசமான வீடியோ இதோ!