இதுவரை இல்லாத புது ஸ்டைலில் மகேஷ் பாபுவின் SSMB28 பட டைட்டில் ரிலீஸ்... செம்ம மாஸ் அறிவிப்பால் உற்சாகத்தில் ரசிகர்கள்!

மகேஷ் பாபுவின் SSMB28 பட டைட்டில் ரிலீஸ் அறிவிப்பு,mahesh babu in ssmb28 movie title release announcement | Galatta

தெலுங்கு சினிமாவின் உச்ச நட்சத்திரம் நாயகராக ஜொலிக்கும் நடிகர் மகேஷ்பாபுவின் 28 வது திரைப்படமாக தயாராகி வரும் SSMB28 திரைப்படத்தின் டைட்டில் ரிலீஸ் குறித்த அதிரடி அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். தெலுங்கு சினிமா ரசிகர்கள் விரும்பும் பக்கா மாஸ் திரைப்படங்களில் நடித்து வரும் நடிகர் மகேஷ்பாபு நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் சர்க்காரு வாரி பாட்டா. இயக்குனர் பரசுராம் இயக்கத்தில் மகேஷ் பாபு மற்றும் கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்த வெளிவந்த சர்க்காரு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. 

இதைத்தொடர்ந்து அடுத்ததாக பிரம்மாண்ட இயக்குனர் SS.ராஜமௌலி இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிகர் மகேஷ் பாபு கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். RRR திரைப்படத்தின் இமாலய வெற்றியை தொடர்ந்து இயக்குனர் SS.ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் இந்த புதிய திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக உலக அளவில் மிகப் பிரபலமான இந்தியானா ஜோன்ஸ் திரைப்படங்களின் பாணியில் பக்கா ஆக்சன் அட்வென்ச்சர் திரைப்படமாக இத்திரைப்படம் இருக்கும் என SS.ராஜமௌலி தெரிவித்திருப்பது இன்னும் எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது.

இதனிடையே தனது திரை பயணத்தில் 28 வது படமாக மகேஷ் பாபு நடித்து வரும் திரைப்படம் தான் SSMB28. தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான திரிவிக்ரம் சீனிவாஸ் அவர்கள் எழுதி இயக்கும் SSMB28 திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட நிலையில், அடுத்த 2024 ஆம் ஆண்டு சங்கராந்தி வெளியீடாக ஜனவரி 13ஆம் தேதி SSMB28 திரைப்படத்தை உலகெங்கும் திரையரங்குகளில் வெளியிடப் படக் குழுவினர் திட்டமிட்டுள்ளனர். கடைசியாக இயக்குனர் திரிவிக்ரம் சீனிவாஸ் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் கதாநாயகனாக நடிக்க வெளிவந்த அல வைகுண்டபுரம்லோ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. தெலுங்கில் மட்டுமல்லாது தமிழிலும் ஹிட்டடித்த அல வைகுண்டபுரம்லோ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் SSMB28 திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

மகேஷ் பாபு உடன் இணைந்து பூஜா ஹெட்டே கதாநாயகியாக நடிக்க, ஸ்ரீ லீலா, ஜெகபதிபாபு, ஜெயராம், ரம்யா கிருஷ்ணன், பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வரும் SSMB28 திரைப்படத்திற்கு விக்ரம் வேதா, சூப்பர் டீலக்ஸ் படங்களின் ஒளிப்பதிவாளர் பி.எஸ்.வினோத் ஒளிப்பதிவில், நவீன் நூலி படத்தொகுப்பு செய்ய தமன்.S இசையமைக்கிறார். ஹாரிக்கா & ஹாசினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் SSMB28 திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் வருகிற மே 31ஆம் தேதி திரைப்படத்தின் டைட்டில் வெளியாகும் என படக் குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மேலும் இதுவரை இல்லாத புது ஸ்டைலில் மகேஷ் பாபுவின் SSMB28 திரைப்படத்தின் டைட்டிலை அவரது ரசிகர்கள் வெளியிட இருக்கின்றனர். ஆம் வருகிற மே 31 ஆம் தேதி நேரடியாக திரையரங்குகளில் ரசிகர்கள் முன்னிலையில் மகேஷ்பாபுவின் SSMB28 திரைப்படத்தின் டைட்டில் வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது. அந்த அறிவிப்பு இதோ…
 

A Smashing 𝐌𝐀𝐒𝐒 Euphoria is all set to begin!! 🤩#SSMB28 Title will be revealed by all of you, SUPER FANS at 𝐓𝐇𝐄𝐀𝐓𝐑𝐄𝐒 near you on 𝟑𝟏𝐬𝐭 𝐌𝐀𝐘 in a Never before way! 🔥

Stay tuned for more exciting updates 😎

Super 🌟 @urstrulyMahesh #Trivikram @hegdepoojapic.twitter.com/m0u41bGfGn

— Haarika & Hassine Creations (@haarikahassine) May 26, 2023

60 வயதில் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட பிரபல நடிகர்.. குவியும் வாழ்த்துகள்..  – வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே..
சினிமா

60 வயதில் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட பிரபல நடிகர்.. குவியும் வாழ்த்துகள்.. – வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே..

சம்யுக்தா மீது போலீஸ் புகார் இருக்கா? உண்மையை உடைத்த சம்யுக்தா அம்மா.. முழு வீடியோ உள்ளே.
சினிமா

சம்யுக்தா மீது போலீஸ் புகார் இருக்கா? உண்மையை உடைத்த சம்யுக்தா அம்மா.. முழு வீடியோ உள்ளே.

‘அயோத்தி’ பட வெற்றியை தொடர்ந்து பிரபல இயக்குனருடன் கைகோர்க்கும் சசிக்குமார் – வைரலாகும் அட்டகாசமான அறிவிப்பு இதோ..
சினிமா

‘அயோத்தி’ பட வெற்றியை தொடர்ந்து பிரபல இயக்குனருடன் கைகோர்க்கும் சசிக்குமார் – வைரலாகும் அட்டகாசமான அறிவிப்பு இதோ..