கீர்த்தி சுரேஷின் ரகு தாத்தா ஷூட்டிங்கில் கொண்டாட்டம்... KGF, காந்தாரா தயாரிப்பாளரின் முதல் தமிழ் படம்! வைரல் புகைப்படங்கள் உள்ளே

கீர்த்தி சுரேஷின் ரகு தாத்தா படப்பிடிப்பு நிறைவு,keerthy suresh in raghu thatha movie shooting completed | Galatta

தென்னிந்திய சினிமாவின் நட்சத்திர கதாநாயகிகளில் ஒருவராக உயர்ந்திருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்திருக்கும் ரகு தாத்தா திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்த அதிரடி அறிவிப்பு தற்போது வெளியானது. ஆகச்சிறந்த நடிகையாகவும் பல கோடி ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோயினாகவும் வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். முன்னதாக வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்த குட்லக் சகி, இயக்குனர் செல்வராகவன் உடன் இணைந்து நடித்த அதிரடி படமான சாணிக் காயிதம், தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு உடன் இணைந்து நடித்த சர்க்காரு வாரி பாட்டா, மற்றும் மலையாளத்தில் டொமினோ தாமஸ் உடன் இணைந்து நடித்த வாஷி என வரிசையாக நான்கு படங்கள் கடந்த 2022 ஆம் ஆண்டு நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளிவந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன.

இதைத்தொடர்ந்து இந்த 2023 ஆம் ஆண்டில் நடிகர் நாணியுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ் நடித்த தசரா திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. தொடர்ந்து வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்காக மெகா ஸ்டார் சிரஞ்சீவியுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கும் போலா ஷங்கர் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 11ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாக இருக்கிறது. முன்னதாக முதல் முறை இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வைகைப்புயல் வடிவேலு, ஃபகத் பாசில் ஆகியோரோடு இணைந்து கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள மாமன்னன் திரைப்படத்தை வருகிற ஜூன் மாதத்தில் வெளியிட படக் குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதுபோக நடிகர் ஜெயம்ரவி உடன் இணைந்து சைரன் படத்தில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் இயக்குனர் கே.சந்துரு இயக்கத்தில் ரிவால்வர் ரீட்டா எனும் படத்திலும் நடித்து வருகிறார்.

இதனிடையே கீர்த்தி சுரேஷின் அடுத்த படமாக வெளிவர தயாராகி வரும் திரைப்படம் தான் ரகு தாத்தா. தி ஃபேமிலி மேன் வெப் சீரிஸ்களின் கதாசிரியர் சுமன் குமார் எழுதி இயக்கும் இந்த ரகு தாத்தா திரைப்படத்தை கே ஜி எஃப் மற்றும் காந்தாரா உள்ளிட்ட PAN INDIA திரைப்படங்களை தயாரித்த HOMBALE FILMS  நிறுவனம் தயாரித்துள்ளது.  ரகு தாத்தா திரைப்படம் தான் HOMBALE FILMS நிறுவனத்தின் முதல் தமிழ் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. கீர்த்தி சுரேஷ் உடன் இணைந்து நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் அவர்கள் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் ரகு தாத்தா திரைப்படத்தில், நடிகை தேவதர்ஷினி, கன்னட நடிகர் ரவீந்திர விஜய், ஹாலிவுட் நடிகர் ராஜீவ் ரவீந்திரநாதன் மற்றும் சமீபத்தில் வெளிவந்த மாடன் லவ் சென்னை ஆந்தாலஜி வெப் சீரிஸில் நடித்த சூ கோய் ஷெங் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளர் யாமினி யேக்னமூர்த்தி ஒளிப்பதிவில் TS.சுரேஷ் படத்தொகுப்பு செய்யும் ரகு தாத்தா படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

இயக்குனர் கே.பாக்யராஜ் அவர்களின் இன்று போய் நாளை வா திரைப்படத்தில் இடம்பெற்ற பிரபலமான வசனத்தை தலைப்பாகக் கொண்ட கீர்த்தி சுரேஷின் ரகு தாத்தா திரைப்படம் வெகு விரைவில் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் ரகு தாத்தா திரைப்படத்தின் படப்பிடிப்பு முற்றிலுமாக நிறைவடைந்து இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதனை அறிவிக்கும் வகையில் படப்பிடிப்பு தளத்தில் படப்பிடிப்பை நிறைவு செய்து கீர்த்தி சுரேஷ் உடன் படக்குழுவினர் அனைவரும் கேக் வெட்டி கொண்டாடும் புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த புகைப்படங்கள் இதோ…
 

🎬 That's a wrap, folks! 🎉🎥 Raghuthatha, where the revolution finds its home, has completed its fiery shoot! Stay tuned for a revolution that'll make your heart race! #Raghuthatha@KeerthyOfficial @hombalefilms #VijayKiragandur @sumank #MSBhaskar @yaminiyag @RSeanRoldanpic.twitter.com/rk4oSw7FyO

— Hombale Films (@hombalefilms) May 26, 2023

ஜீவி பிரகாஷ் குமார் - கௌரி கிஷனின் புதிய பட முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு... ட்ரெண்டாகும் ரொமான்டிக்கான GLIMPSE இதோ!
சினிமா

ஜீவி பிரகாஷ் குமார் - கௌரி கிஷனின் புதிய பட முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு... ட்ரெண்டாகும் ரொமான்டிக்கான GLIMPSE இதோ!

பிசாசு 2, விஜய் சேதுபதியுடன் புதிய படம்... இயக்குனர் மிஷ்கின் கொடுத்த அட்டகாசமான அப்டேட்! வைரல் வீடியோ உள்ளே
சினிமா

பிசாசு 2, விஜய் சேதுபதியுடன் புதிய படம்... இயக்குனர் மிஷ்கின் கொடுத்த அட்டகாசமான அப்டேட்! வைரல் வீடியோ உள்ளே

'உலக பட்டினி தினத்தில் 234தொகுதிகள் 5மாநிலங்களில் பசியினை போக்கும் தளபதி விஜயின் மக்கள் இயக்கம்!'- குவியும் பாராட்டுகள்… விவரம் இதோ!
சினிமா

'உலக பட்டினி தினத்தில் 234தொகுதிகள் 5மாநிலங்களில் பசியினை போக்கும் தளபதி விஜயின் மக்கள் இயக்கம்!'- குவியும் பாராட்டுகள்… விவரம் இதோ!