தளபதி விஜயின் மேலாளரான லியோ பட இணை தயாரிப்பாளரின் புதிய படத்தில் அனிருத்... அடுத்த ட்ரெண்டிங் பாடலின் கலக்கலான GLIMPSE இதோ!

லியோ பட இணை தயாரிப்பாளரின் புதிய படத்தில் இணைந்த அனிருத்,Anirudh sung a song in sesham mikell fathima jagathish palanisamy | Galatta

தளபதி விஜயின் மேலாளரும் தயாரிப்பாளருமான ஜெகதீஷ் பழனிசாமி தயாரிப்பில் உருவாகும் சேஷம் மைக்கேல் ஃபாத்திமா திரைப்படத்தில் ராகஸ்டார் இசையமைப்பாளர் அனிருத் ஒரு பாடல் பாடி இருக்கிறார். இந்திய சினிமாவின் நட்சத்திர இசையமைப்பாளர்களில் ஒருவராக உயர்ந்திருக்கும் ராக்ஸ்டார் அனிருத் கடந்த 2022-ம் ஆண்டில் தளபதி விஜயின் பீஸ்ட், விஜய் சேதுபதியின் காத்து வாக்குல ரெண்டு காதல், சிவகார்த்திகேயனின் டான், உலகநாயகன் கமல்ஹாசனின் விக்ரம் & தனுஷின் திருச்சிற்றம்பலம் என தொடர்ச்சியாக பிளாக்பஸ்டர் திரைப்படங்களுக்கு இசையமைத்தார். 

அதைத்தொடர்ந்து இந்த 2023 ஆம் ஆண்டிலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் முதல் முறை இயக்குனர் நெல்சன் கைகோர்த்த டார்க் காமெடி ஆக்ஷன் படமாக வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீஸாக இருக்கும் ஜெயிலர், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் - தளபதி விஜய் கூட்டணியில் பக்கா ஆக்ஷன் பிளாக் திரைப்படமாக வரும் அக்டோபர் 19ஆம் தேதி ஆயுத பூஜை வெளியிடாக ரிலீஸாக இருக்கும் லியோ, இயக்குனர் அட்லியின் முதல் பாலிவுட் படமாக ஷாருக்கான் நடிப்பில் தயாராகி வரும் செப்டம்பர் 7ம் தேதி ரிலீஸாக இருக்கும் ஜவான் மற்றும் தெலுங்கில் இயக்குனர் கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் கதாநாயகனாக நடிக்க அடுத்த 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 5ஆம் தேதி ரிலீஸாக இருக்கும் தேவரா ஆகிய திரைப்படங்களுக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இதுபோக பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்திற்கு இசையமைத்து வரும் அனிருத், இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் கதாநாயகனாக நடிக்கும் விடாமுயற்சி , ஜெய் பீம் பட இயக்குனர் TJ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்க இருக்கும் தலைவர் 170 ஆகிய படங்களுக்கும் அனிருத் இசையமைக்க இருக்கிறார்.

இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் பாடகராகவும் பல குறிப்பிடப்படும் படங்களில் சூப்பர் ஹிட் பாடல்களை பாடி ரசிகர்களை மகிழ்வித்து வரும் ராக்ஸ்டார் அனிருத், அந்த வரிசையில் தற்போது மலையாளத்தில் தயாராகி இருக்கும் சேஷம் மைக்கில் ஃபாத்திமா திரைப்படத்திலும் ஒரு பாடல் பாடியிருக்கிறார். தளபதி விஜயின் மேலாளரும் லியோ திரைப்படத்தின் இணை தயாரிப்பாளருமான ஜெகதீஷ் பழனிசாமியின் தி ரூட் மற்றும் தயாரிப்பாளர் சுதன் சுந்தரமின் பேஷன் ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள சேஷம் மைக்கில் ஃபாத்திமா திரைப்படத்தை இயக்குனர் மனு.சி.குமார் எழுதி இயக்கியுள்ளார். ஹிரிதயம் மற்றும் மாநாடு படங்களின் நாயகி கல்யாணி பிரியதர்ஷன் கதையின் நாயகியாக நடிக்கும் சேஷம் மைக்கில் ஃபாத்திமா திரைப்படத்தில் ஃபெமினா ஜார்ஜ், அனீஸ் ஜி மேனன், ஷாஹீன் சித்திக் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சந்தான கிருஷ்ணன் ரவிச்சந்திரன் ஒளிப்பதிவில், கிரண் தாஸ் படத்தொகுப்பு செய்துள்ள சேஷம் மைக்கேல் பாத்திமா திரைப்படத்திற்கு ஹிஷாம் அப்துல் வாஹப் இசை அமைத்திருக்கிறார். இந்நிலையில் இந்த சேஷம் மைக்கேல் ஃபாத்திமா திரைப்படத்தின் முதல் பாடலாக நாளை மே 27 ஆம் தேதி ரிலீஸாக இருக்கும் "டட்ட டட்டர" எனும் பாடலை அனிருத் பாடியிருப்பதாக பட குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதனை அறிவிக்கும் வகையில் அசத்தலான ப்ரோமோ வீடியோவையும் வெளியிட்டுள்ளனர். கலக்கலான அந்த ப்ரோமோ வீடியோ இதோ…
 

'உலக பட்டினி தினத்தில் 234தொகுதிகள் 5மாநிலங்களில் பசியினை போக்கும் தளபதி விஜயின் மக்கள் இயக்கம்!'- குவியும் பாராட்டுகள்… விவரம் இதோ!
சினிமா

'உலக பட்டினி தினத்தில் 234தொகுதிகள் 5மாநிலங்களில் பசியினை போக்கும் தளபதி விஜயின் மக்கள் இயக்கம்!'- குவியும் பாராட்டுகள்… விவரம் இதோ!

லோகேஷ் கனகராஜின் மாநகரம் ஹிந்தி ரீமேக்... முனிஷ்காந்த் கேரக்டரில் கலக்கும் விஜய் சேதுபதி! விறுவிறுப்பான டீசர் இதோ
சினிமா

லோகேஷ் கனகராஜின் மாநகரம் ஹிந்தி ரீமேக்... முனிஷ்காந்த் கேரக்டரில் கலக்கும் விஜய் சேதுபதி! விறுவிறுப்பான டீசர் இதோ

மம்மூட்டி - ஜோதிகா இணைந்து நடித்த முதல் படம்... ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த அசத்தலான GLIMPSE இதோ!
சினிமா

மம்மூட்டி - ஜோதிகா இணைந்து நடித்த முதல் படம்... ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த அசத்தலான GLIMPSE இதோ!