ஒட்டுமொத்த இந்திய திரையுலக ரசிகர்களுக்கும் ஃபேவரட் ஹீரோவாக விளங்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த 47 ஆண்டுகளாக தொடர்ந்து ரசிகர்களை தனது ஸ்டைலான நடிப்பால் மகிழ்வித்து வருகிறார். அந்த வகையில் அடுத்தடுத்து ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

முன்னதாக தனது மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இணைந்து நடிக்க, லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் லால் சலாம் திரைப்படத்தில் முக்கியமான கௌரவ வேடத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கிறார். இதனிடையே இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது தயாராகி வரும் திரைப்படம் ஜெயிலர்.

எந்திரன், பேட்ட, அண்ணாத்த படங்களை தொடர்ந்து மீண்டும் சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் அவர்கள் சூப்பர் ஸ்டாரின் ஜெயிலர் படத்தை தயாரிக்கிறார். படையப்பா படத்திற்கு பின் ஜெயிலர் படத்தில் மீண்டும்  சூப்பர் ஸ்டாருடன் இணைந்திருக்கும் நடிகை ரம்யாகிருஷ்ணன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்க, முன்னணி கன்னட நடிகர் சிவ ராஜ்குமார் மிக முக்கியமான மிரட்டலான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

மேலும் வசந்த் ரவி, யோகி பாபு மற்றும் மலையாள நடிகர் விநாயகன் ஆகியோரும் ஜெயிலர் படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ராக்ஸ்டார் இசையமைப்பாளர் அனிருத் பேட்ட & தர்பார் படங்களைத் தொடர்ந்து ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்திற்கும் இசையமைக்கிறார். 

ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து, முக்கிய வேடத்தில் நடிக்கும் நடிகர் சிவ ராஜ்குமாரின் புகைப்படத்தை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அசத்தலான அந்த புகைப்படம் இதோ…
 

Dr.Shiva Rajkumar from the sets of #Jailer 🔥@rajinikanth @NimmaShivanna @Nelsondilpkumar @anirudhofficial pic.twitter.com/fLb9KRBRF0

— Sun Pictures (@sunpictures) November 17, 2022