தென்னிந்திய திரையுலகில் சிறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை த்ரிஷா. துணை நடிகையாக திரையில் கால்பதித்து இன்று வளர்ந்து வரும் ஹீரோயின்களுக்கு ரோல் மாடலாக திகழ்கிறார். ஹை கிளாஸ் பெண்ணாக மட்டுமல்லாமல், நம் பார்த்து பழகும் பக்கத்து வீட்டு பெண்ணாகவும் திரையில் ஜொலிப்பது த்ரிஷாவின் மிகப்பெரிய பிளஸ். தமிழ் இண்டஸ்ட்ரியை தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம்,ஹிந்தி என அனைத்து ஏரியாக்களிலும் சொல்லி அடிக்கும் கில்லியாய் விளங்கி வருகிறார். 

அறிமுக இயக்குனர் திருஞானம் இயக்கத்தில் பரமபதம் விளையாட்டு எனும் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் ட்ரைலர் தற்போது டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது. த்ரிஷாவின் 60-வது படம் என்பதால் கூடுதல் எதிர்பார்ப்பு உள்ளது. பொலிடிக்கல் திரில்லராக உருவாகியுள்ள இத்திரைப்படத்தில், அம்மா பொண்ணுக்கும் இடையேயான உணர்வுப்பூர்வமான காட்சிகள் இடம்பெற்றுள்ளது. 

த்ரிஷாவுடன் ரிச்சர்டு மற்றும் நந்தா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்திற்கு அம்ரிஷ் இசையமைத்துள்ளார். தினேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த ஆண்டு தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு வரும் ஏப்ரல் 14-ம் தேதி இந்த படம் நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. கடைசியாக ஆர்யா நடித்த டெடி திரைப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது. 

கடந்த ஆண்டு பிப்ரவரி 28-ம் தேதி வெளியாகவிருந்த இந்த படம் சில காரணங்களால் தள்ளிப்போனது. முதல் முதலாக பொலிடிக்கல் திரில்லர் நடிக்கிறேன். அடர்ந்த காட்டிற்குள் சில காட்சிகளை எடுத்ததாக த்ரிஷா கூறியிருந்தார். 

த்ரிஷா நடிப்பில் உருவாகி ரிலீஸுக்கு தயாராக இருக்கும் மற்றோரு படம் ராங்கி. லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரித்த இந்த படத்தை எங்கேயும் எப்போதும் புகழ் சரவணன் இயக்கியுள்ளார். இந்த படத்துக்கு ஏ ஆர் முருகதாஸ் கதை மற்றும் வசனம் எழுதியுள்ளார். சத்யா இசையமைத்துள்ளார். சக்தி ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு சுபாரக் படத்தொகுப்பு செய்துள்ளார். 

ட்ரெண்ட் செட்டராக திகழும் த்ரிஷா, சென்ற லாக்டவுனில் கெளதம் மேனன் இயக்கத்தில் கார்த்திக் டயல் செய்த எண் குறும்படத்தில் சிம்புவுடன் ஜோடி சேர்ந்து நடித்து அசத்தினார். மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பிரம்மாண்ட படைப்பான பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ளார் த்ரிஷா. கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் ஐந்து மொழிகளில் உருவாக்கப்பட்டு படமாகி வருகிறது. கார்த்தி, ஜெயம்ரவி, விக்ரம், ஐஸ்வர்யாராய், ஜெயராம், லால், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார்.