வரும் பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 11 ம் தேதி இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில்  ஆரவாரத்துடன் வெளியாகவிருக்கும்  ‘துணிவு’ படத்தின் இறுதிகட்ட விளம்பர பணி நடைபெற்று வருகிறது.  வங்கி கொள்ளையை மையப்படுத்தி உருவாகி இருக்கும் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று வருகிறது. தமிழ்நாடு திரையரங்குகளுக்கான  வினியோகஸ்த உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளதையடுத்து அப்படத்தின் தொலைக்காட்சி உரிமம் பெற்ற கலைஞர் தொலைக்காட்சியில் துணிவு பட இயக்குனர் எச். வினோத், கதாநாயகி மஞ்சு வாரியார் மற்றும் படக்குழுவினர் பங்குபெரும் சிறப்பு பேட்டி வரும் ஜனவரி 12 வெளியாகவிருகின்றது. அதில் ரசிகர்கள் படத்தின் அறிவிப்பையடுத்து அப்டேட் என்ற டிரண்டிங் நிகழ்வுகளுக்கு விளக்கமளித்தார் இயக்குனர்  எச்.வினோத்.

அதில் அவர் “ ஒரு படத்தில் முதல் பார்வை, ஒரு மோஷன் போஸ்டர், 2,3 பாடல்கள், ஒரு டீசர் மற்றும் டிரைலர் இருக்கும். அதை படம் வெளியீட்டுக்கு முன்பு ஒரு 60 நாளில் இருந்து பயன்படுத்தினால்  வாரம் ஒரு அப்டேட் கொடுக்கலாம். படம் ஆரம்பித்திலிருந்து அப்டேட் கேட்டுகொண்டே இருந்தால்  மூன்று  மாதத்தில் எல்லாம் முடிந்து விடும். அதன் பின் படத்தை தான் துண்டு துண்டாக வெளியிட முடியும். அதுதான் வலிமை படத்திற்கும் நடந்தது. கொஞ்சம் கொஞ்சமா அப்டடேட் கேட்டு படத்தில் இருப்பதையெல்லாம் கொடுத்து பின் படத்தில் பார்ப்பதற்கு கொஞ்சம் தான் மிஞ்சியது. இது என்ன ஆகுமென்றால் படம் பார்க்க யூகிக்குமளவு உள்ளது. கதை முன்பே தெரிந்தது என்ற என்னத்திற்கு போய் விடும். அதனால அப்டேட் என்பது பொதுவான விஷயங்களை கேட்பதோடு சரி,  படத்தில் உள்ள முக்கியமான விஷயங்களை கேட்காமல் இருப்பது நல்லது ” என்றார்.

மேலும் ரசிகர்கள் படத்திற்காக செய்யும் விளம்பர வேலைகள் மிகவும் நெகிழ்ச்சியாக உள்ளது என்றும் “படத்திற்காக செய்யும் சிறப்பு விளம்பர வேலைகளை எல்லாம் அஜித் சார் ரசிகர்கள் டிரெண்ட் செட் செய்து விடுவார். அதன் பின் தான் மற்ற ஹீரோக்களின் ரசிகர்கள் செய்கின்றனர்”  என்று குறிப்பிட்டிருந்தார்.

கார்த்தி நடிப்பில் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ மற்றும் ‘சதுரங்க வேட்டை’ படத்தின் மூலம் பிரபலமடைந்த இயக்குனர் எச்.வினோத் அதன்பின் போனி கபூர் தயாரிப்பில் அஜித் குமார் நடிப்பில் ‘நேர்கொண்ட பார்வை’ ‘வலிமை’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது