தமிழ் சினிமாவில் விஜய், அஜித் படங்களில் துணை நடிகராக அறிமுகமாகி 'கில்லி' , 'குருவி' , 'கிரீடம்' , 'பந்தயம்' , 'காஞ்சிவரம்' போன்ற படங்களில் நடித்து வந்தவர் நடிகர் விமல்.  2009 ம் ஆண்டு இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் பசங்க படத்தின் மூலம் அறிமுகமாகி மக்களிடம் கவனம் பெற்றவர் விமல். அதன்பின் 'களவாணி' படத்தின் மூலம் பிரபலமடைந்தார். சரண்யா பொன்வண்ணன், ஓவியா, இளவரசு நடிப்பில் உருவான களவாணி படத்தில் இவரது  'அரிக்கி' பாத்திரத்திரம் அதிகம் பேசப்பட்டது. பின்னர் இயக்குனர் சற்குணம் இயக்கத்தில்  ‘வாகை சூடவா’ படத்தில் நடித்தார். அதன் மூலம் விமல் நல்ல நடிகர் என்பதை மக்களுக்கு அடையாளம் காட்டி பின் தொடர் படங்களில் நடித்து வந்தார். ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’, தேசிங்கு ராஜா, ஜன்னல் ஓரம், புலிவால் ஆகிய படங்களில் மக்களை பெரிதும் கவர்ந்தார். பின் அடுத்தடுத்த தோல்வி படங்களை சந்தித்து அவர் திரைபயணத்தில் ஒரு இடைவெளி விழுந்தது.

சமீபத்தில் விமல் நடிப்பில் வெளியான கிரைம் திரில்லர் கதையை மையப்படுத்தி உருவான இணைய தொடர் ‘விலங்கு’  . மக்களை வெகுவாக கவர்ந்த இந்த தொடரின் மூலம் விமல் திரைபயணத்தில் சந்தித்த தொடர் தோல்வி படங்களுக்கு ஆறுதல் பெற்றார். அதன் மூலம் விமல் மீண்டும் தொடர்ந்து படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.  ‘துடிக்கும் கரங்கள்’ , ‘தெய்வ மச்சான்’ , சண்டைக்காரி மற்றும் பல படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே நடிகர் விமல் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகாவும் அது குறித்து மருத்துவமனையில் உள்ளது போல் ஒரு புகைப்படமும் வெளியாகி  இணையத்தில்  வைரலானது. விமல் ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் அதிர்ச்சிக்குள்ளாகி தங்கள் பிராத்தனைகளையும் வருத்தங்களையும் தெரிவித்து வந்த நிலையில்

விமல் தனது தரப்பிலிருந்து “நான் நலமுடன் படப்பிடிப்பிலிருந்து” என படப்பிடிப்பு தளங்களில் படக்குழுவுடன் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டார். அதன் பின் விமல் ஒரு காணொளி மூலம் நான் நலமாக உள்ளேன். வீண் வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் வரும் ஆண்டில் நிறைய புது படங்களில் நடித்து வருகிறேன். வதந்திகளை பரப்பாமல் மற்றவரை வாழ விடுங்கள் நீங்களும் நன்றாக வாழுங்கள் என்று குறிப்பிட்டிருந்தார். இதனையடுத்து விமல் ரசிகர்கள் அமைதியடைந்து விமல் ஆரோக்கியம் குறித்து அவர் கொடுத்த விவரங்களை பகிர்ந்து வருகின்றனர்.  

மேலும் விவரங்களுக்கு,