தி லெஜண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் முதன் முறையாக மிகுந்த பொருட்செலவில் மிக பிரமாண்டமான முறையில் பன்மொழி பான் இந்தியா படம் ஒன்றை தயாரித்து வருகின்றனர். தி லெஜன்ட் என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த படத்தின் கதாநாயகனாக லெஜண்ட் சரவணன் நடிக்கிறார்.

தி லெஜண்ட் படத்தின் கதை திரைக்கதையை எழுதி இயக்குகிறார்கள் ஜேடி-ஜெர்ரி.ஹாரிஸ் ஜெயராஜ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.பாலிவுட் நடிகை ஊர்வசி ரௌடெலா ஹீரோயினாக நடிக்கிறார் மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக்,பிரபு,யோகி பாபு,ரோபோ சங்கர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த படம் வரும் ஜூலை 28ஆம் தேதி பிரம்மாண்டமாக உலகம் முழுவதும் 2500 திரையரங்குகளுக்கு மேல் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.

படத்தின் நாயகன் லெஜண்ட் சரவணன் இன்று சமூகவலைத்தள பக்கங்களில் இணைந்துள்ளார்,தனது முதல் ட்வீட்டாக படத்தின் அதிரடியான புது டீஸர் ஒன்றை பதிவிட்டுள்ளார்.இந்த டீஸர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த அதிரடியான டீஸரை கீழே உள்ள லிங்கில் காணலாம்